இந்தியாவின் மிகப் பெரிய கார்டு பரிவர்த்தனை நெட்வொர்க் நிறுவனமான விசா டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மீதான கட்டணங்களைக் குறைத்துள்ளது.
விசா கார்டு பரிவர்த்தனை கட்டணங்களைக் குறைத்ததன் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களைப் பெற முடியும் என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை சந்தையில் மிகப் பெரிய வளர்ச்சியினை விசா பிடித்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கட்டண குறைப்பு
வங்கிகளுக்கு விசா நிறுவனம் அனுப்பியுள்ள விசா டெபிட் கார்டு பரிவர்த்தனை கட்டணங்களை 95% வரை குறைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்தக் கட்டண குறைப்பு 2,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
டேட்டா செயலாக்கக் கட்டண குறைப்பு
விசா நிறுவனம் தங்களது டேட்டா செயலாக்க கட்டணத்தினைக் குறைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களின் டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க உள்ளதாக விசாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா
டெபிட் கார்டு பரிவர்த்தனை கட்டண குறைப்பு மூலம் வாடிக்கையாளர்கள், வணிகர்கள் மட்டும் இல்லாமல் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
விசா கார்டுகள்
இந்திய டெபிட் கார்டு சந்தையில் 40 சதவீதத்தினை விசா நிறுவனம் வைத்துள்ளது. அதே நேரம் கிரெடிட் கார்டில் 51 சதவீத விசா வசம் உள்ளது
எவ்வளவு கட்டணம் குறைப்பு
தற்போது விசா கார்டு சேவையினை அளிக்கும் வங்கிகள் ஒரு பரிவர்த்தனைக்கு 2.99 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வரும் நிலையில் அது 15 பைசா முதல் 1.5 ரூபாய் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் பரிவர்த்தனைகள் மட்டுமே
விசா நிறுவனத்தின் இந்தக் கட்டண குறைப்பானது உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என்றும் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு எப்போதும் போலவே கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ரூபே
இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனம் ரூபே என்ற கார்டினை அறிமுகம் செய்துள்ள நிலையில் அதற்கு ஒரு டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு 90 பைசா கட்டணம் வசூலித்து வருகிறது. ரூபே உடனான போட்டியில் தாக்கு பிடிக்கவே விசா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு
மத்திய அரசு டிசம்பர் மாதம் எப்படி 2,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மானியம் அளித்துள்ளதோ அதே போன்று ஒரு முறை தான் இது என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications