ரயில் பயணங்களின் போது ஐஆர்சிடிசி வநியோகித்து வரும் உணவுகள் குறித்துச் சுதமான நீரைப் பயன்படுத்துவதில்லை, கழிவரை நீரை பயன்படுத்துகிறார்கள் என்று புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில் அதனைத் தடுக்க இந்தியன் ரயில்வேஸ் புதிய அதிரடி திட்டத்தினைக் கையில் எடுத்துள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகளுக்குச் சுத்தமான உணவை வழங்குவதை உறுதி செய்ய ஐஆர்சிடிசி சமையல் அரையின் சிசிடிவி கேமாரக்கள் மூலம் உணவை ஆர்டர் செய்தவர்களே கண்காணிக்கக் கூடிய நேரலை வசதிகளை அறிமுகம் செய்ய உள்ளனர் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
செயலி
இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் இதற்கான பிரத்தியேக செயலி ஒன்றை உருவாக்கும் பணியில் உள்ளது. இதன் மூலம் ரயில் உணவுகள் பாதுகாப்பு குறித்து வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சமையல் அறைகள்
தற்போது ஐஆர்சிடிசி-க்கு 200 அடிப்படை சமையல் அறைகள் உள்ள நிலையில் அதில் 16 சமையல் அறைகளைக் கண்காணிக்கக் கூடிய சிசிடிவி கேமார வசதிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி
மேலும் பிற ஐஆர்சிடிசி சமையல் அறைகளிலும் விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் ஒவ்வொரு நாளும் இந்தச் சமையல் அறைகளில் தினமும் 12 லட்சம் சாப்பாடு தயார் செய்யப்படுவதாகவும் அதில் 10 லட்சம் ரயிலில் பயணம் செய்யும் போது ஆர்டர் செய்யப்படு செய்வதன் மூலம் விநியோகிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு
ஐஆர்சிடிசி சமையல் அறைகளைக் கண்காணிக்கும் கேமராக்களைச் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் கண்காணிக்கும் படியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக ரயில் பயணிகள் இதனைப் பயன்படுத்தி உணவின் சுத்தத்தினைப் பற்றி அறிந்துகொள்ளவும் முடியும்.


Click it and Unblock the Notifications