இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மீண்டும் பங்குகளைத் திருப்பி வாங்க முடிவு செய்துள்ளதாகவும் 2018 ஜூன் 15-ம் தேதி நடைபெற இருக்கும் போர்டு இயக்குனர்கள் கூட்டத்தில் இதற்காக முடிவு எடுக்கப்படும் என்றும் மும்பை பங்கு சந்தைக்குத் தெரிவித்துள்ளனர்.
மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிசிஎஸ் எவ்வளவு பங்குகளை வாங்க இருக்கிறது என்ன விலைக்கு வாங்க இருக்கிறது என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
பைபேக்
சென்ற ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 2017-2018 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் மூலதன லாபத்தினை 80 முதல் 100 சதவீதமாகவே நிவர்கிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பைபேக் மூலம் டிசிஎஸ் நிறுவனம் பெற்றது என்ன?
டிசிஎஸ் நிறுவனத்தின் முந்தைய பைபேக் செயல்பாடுகளின் போது 3.60 கோடி ரூபாய் பங்குகளைத் திரும்பப் பெற்றதன் மூல நிறுவனத்தின் 64.2 சதவீத பங்குகள் டாடா குழுமத்தின் வசம் உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்கள்
டிசிஎஸ் நிறுவனத்தின் பிற முக்கிய முதலீட்டாளர்கள் என்று பார்த்தால் சிங்கப்பூர் அரசு, காப்தால் மொரிஷியஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் யூரோபெசிபிக் கிரோத் ஃபண்டு நிறுவனங்கள் ஆகும்.
லாபம்
2017-2018 நிதி ஆண்டில் பங்குதார்களுக்குப் பைபேக் மற்றும் டிவிடண்ட் மூலம் 26,800 கோடி ரூபாய் வரை லாபத்தினை டிசிஎஸ் நிறுவனம் அளித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் பங்குகளைப் பைபேக் மூலம் திரும்பப் பெறுவதன் மூலம் முதலீட்டாளர்கள் மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் வருவாயும் வரும் காலாண்டு முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் வெளியில் கூடுதலாக உள்ள பணத்தினைக் குறைக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே தான் அன்மையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், எச்சிஎல் நிறுவனம் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் பைபேக் மூலம் திரும்பப்பெற்றன.


Click it and Unblock the Notifications