இந்தியர்களின் தனிநபர் வருவாய் 8.6% ஆக உயர்வு.. 6 ஆண்டுகளில் இதுவே குறைவு!
2017-2018 நிதி ஆண்டில் தனிநபர்களின் வருவாய் சராசரியாக 8.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், கடந்த 6 ஆண்டுகளில் இதுவே குறைவு என்றும் தெரியவந்துள்ளது.

2016-2017 நிதி ஆண்டில் தனிநபர் வருவாய் 1,03,870 ரூபாயாக இருந்த நிலையில் அது 2017-2018 நிதி ஆண்டில் 1,12,835 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2016-2017 நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017-2018 நிதி ஆண்டில் விவசாயம், சுரங்கம், குவாரி, மற்றும் உற்பத்தித் துறைகளின் வருவாய் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications