பேடிஎம் வாலெட் பிரிவின் தனிப்பட்ட இ-காமர்ஸ் தளமான பேடிஎம் மால் ஜப்பானின் சாப்ட்பாங்க் மற்றும் சீனாவின் அலிபாபா நிறுவனங்களிடம் இருந்து 225 மில்லியன் டாலர் அதாவது 1509 கோடி ரூபாயினை இரண்டாம் கட்ட நிதியாகத் திரட்டியுள்ளது.
இதற்கு முன்பு ஏப்ரல் மாதம் பேடிஎம் மால் நிறுவனம் முதற்கட்டமாக 445 மில்லியன் டாலர் அதாவது 3,000 கோடி ரூபாயினை முதலீட்டாளர்களிடம் இருந்து முதற்கட்ட நிதியாகப் பெற்று இருந்தது.
சாப்ட்பாங்க்
ஜப்பானின் சாப்ட்பாங்க் தனது எஸ்பி இன்வெஸ்ட்மெண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் 200 மில்லியன் டாலர் அதாவது 1,341 கோடி ரூபாயினைப் பேடிஎம் மாலில் முதலீடு செய்துள்ளது.
அலிபாபா
அதே நேரம் சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா பேடிஎம் மால் நிறுவனத்தில் 25 மில்லியன் டாலர் அதாவது 168 கோடி ரூபாயினை முதலீடு செய்துள்ளது.
பங்குகள்
பேடிஎம் மால் நிறுவனத்தில் சாப்ட்பாங்கிற்கு 21 சதவீத பங்குகளும், அலிபாபா வசம் 46 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் பேடிஎம் மால் நிறுவனத்தில் அலிபாபா நிறுவனம் 1.9 பில்லியன் டாலர் தாவது 12,300 கோடி ரூபாயினை முதலீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பேடிஎம் மால்
பேடிஎம் மால் பிரிவானது 2017 பிப்ரவரி மாதம் முதல் தங்களது இ-காமர்ஸ் வணிகத்தினைத் துவங்கியது. 2017 மார்ச் மாதம் 200 மில்லியன் டாலரினை அலிபாபாவிடம் இருந்து பெற்றது.
பேடிஎம்
பேடிஎம் நிறுவனமானது பேடிஎம் மால் பிரிவில் 5 ஆண்டுகளில் 2.5 பில்லியன் டாலரினை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது பேடிஎம் மால் 700 நகரங்களில் 19,000 பின் கோடுகளுக்குத் தங்களது இ-காமர்ஸ் சேவையினை அளித்து வருகிறது.
ஆப்லைன்
பேடிஎம் மால் நிறுவனமானது 75,000 ஸ்டோர்களுடன் இணைந்து 60 சதவீத பொருட்களை ஆப்லைனில் விற்கவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்தில் தங்கள் வசம் உள்ள பங்குகளை மொத்தமாக வால்மார்ட் வசம் ஒப்படைக்க சாப்ட்பாங்க் முடிவு செய்துள்ள நிலையில் அதன் போட்டி நிறுவனமான பேடிஎம் மாலில் முதலீடுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications