அதீத கடனில் சிக்கித்தவிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், தற்போது எரிக்சன் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகையைத் திருப்பி அளிப்பதைக் குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் இருந்து 94 சதவீத ஊழியர்கள் வெளியேறியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
52,000 ஊழியர்கள்
2008-10ஆம் ஆண்டிகளில் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் சுமார் 52,000 பேர் பணியாற்றி வந்தனர், பல்வேறு காரணங்களுக்காகப் படிப்படியாக இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து தற்போது வெறும் 3400 ஆக உள்ளது.
94 சதவீத ஊழியர்கள்
2010 முதல் 2018 வரையிலாகக் காலத்தில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 94 சதவீதம் அதாவது 48,000 பேர் இந்நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. சமீபத்திய காலத்தில் ஏந்தொரு நிறுவனத்திலும் இப்படியொரு மோசமான நிலை அடைந்ததில்லை.
வர்த்தகம் மூடல்
முகேஷ் அம்பானியின் ஜியோ அறிமுகத்திற்குப் பின் பிற டெலிகாம் நிறுவனங்களைப் போல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை சந்தித்து ஜனவரி மாதத்தில் மொத்த வர்த்தகத்தையும் மூடியது.
கடன்
தற்போதைய நிலையில் இந்நிறுவனம் சுமார் 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவித்து வருகிறது.
டவர் சொத்துக்கள்
மேலும் இந்தக் கடனை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் இருக்கும் டெலிகாம் டவர்களை விற்பனை செய்வதன் மூலம் அடைக்கத் திட்டமிட்டுள்ள அனில் அம்பானிக்கு எரிக்சன் நிறுவனத்தின் கடன் நிலுவை பெரிய தலைவலியாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications