இந்திய வர்த்தகச் சந்தை தற்போது மந்தமாக இருக்கும் காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையான சிறப்புத் திறன், முக்கியத் தொழில்நுட்பம் எனத் தனித்துவமாக ஊழியர்களைத் தேடி வருகிறது.
அப்படிப்பட்ட வேலை தான் தற்போது டெலிகாம் சந்தையில் புதிதாக உருவாகியுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தை
இந்திய டெலிகாம் சந்தையில் போட்டி அதிகரித்துள்ள நிலையில் தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை வழங்க வேண்டும் என்பதில் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனங்கள் தங்களது கவனத்தைச் செலுத்தி வருகிறது.
இதன் காரணமாகவே கன்டென்ட் ஸ்பெஷலிஸ்ட் என்னும் புதிய வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளது.
டேட்டா பயன்பாடு
தற்போது இந்தியாவில் இண்டர்நெட் டேட்டா பயன்பாட்டு அளவு மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் வாடிக்கையாளர்களுக்கு இசை, வீடியோ, செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு எனப் பல வகையில் சிறப்பாகச் சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது டெலிகாம் நிறுவனங்கள்.
கன்டென்ட் ஸ்பெஷலிஸ்ட்
வாடிக்கையாளர்களுக்கு விரும்பும் வகையில் செய்திகளை அளிப்பதன் மூலம் அவர்களின் டேட்டா பயன்பாட்டு அளவு அதிகரிப்பது மட்டும் அல்லாமல் தொடர்ந்து நெட்வொர்க்கை விட்டு வெளியேறாமல் இருப்பார்கள்.
இதைச் சரியாகச் செய்யக் கண்டிப்பாகக் கன்டென்ட் ஸ்பெஷலிஸ்ட் தேவை.
1 கோடி ரூபாய் சம்பளம்
கன்டென்ட் ஸ்பெஷலிஸ்ட் என்னும் பணியில் ஆட்களை நிரப்ப சிலிக்கான் வேலி முதல் ஐஐடி வரையில் டெலிகாம் நிறுவனங்கள் ஊழியர்களைத் தேடி வருகிறது.
இப்பதவியில் அமர்த்தப்படும் நபருக்கு சுமார் 1 கோடி ரூபாய் வரையில் சம்பளம் அளிக்க டெலிகாம் நிறுவனங்கள் தயாராக உள்ளது.
2000 வேலைவாய்ப்புகள்
இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்திய டெலிகாம் நிறுவனங்களில் சுமார் 2,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications