ஹூஸ்டன்: அமெரிக்காவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யாதவரா தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார். அட்டோமொபைல் துறையில் முதன் முறையாகப் பெண் ஒருவருக்கு இந்தத் தலைமை நிதி அதிகாரி பதவியினைப் பெற்றுள்ளது முக்கியமான ஒன்றாகும்.
திவ்யா சூர்யாதவராக்குத் தற்போது 39 வயது ஆகும் நிலையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகச் செப்டம்பர் 1 முதல் பதவி ஏற்பார் என்று தெரிவித்துள்ளனர்.
தலைமை நிர்வாக அதிகாரி
ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக மேரி பாரரா என்ற எண் 2014-ம் ஆண்டு முதல் இருந்து வரும் நிலையில் தலைமை நிதி அதிகாரி பதவி திவ்யாவிற்குக் கிடைத்துள்ளது.
அட்டோமொபைல் துறை
அட்டோமொபைல் துறையின் முதல் பெண் தலைமை அதிகாரி மேரி பாரரா மற்றும் தலைமை நிதி அதிகாரி திவ்யா சூர்யாதவரா என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை
திவ்யா சூர்யாதவரா மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பிரிவில் முதுகலை பெற்ற பிறகு அமெரிக்கா சென்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார்.
பணிகள்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 2005-ம் ஆண்டு இவர் பணியில் சேரும் முன்பு யூபிஎஸ் மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்.
ஜெனரல் மோட்டார்ஸ்
2005-ம் ஆண்டு முதல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இவர் பல் வேறு பணிகளில் தனது தனித்துவத்தினைக் காட்டி ஜப்பானின் சாப்ட்பாங்க் இடம் இருந்து 2.25 பில்லியன் டாலர் முதலீட்டினை பெற்று தர முக்கியக் காரணமாகவும் இருந்துள்ளார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தலைமை முதலீட்டு அதிகாரியாக 2013-2017 நிதி ஆண்டுகளில் இருந்துள்ளார்.
ஸ்டீவன்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக 2014 முதல் பதவி வகித்து வந்த ஸ்டீவன்ஸ் ஓய்வு பெறும் வரை ஆலோசகராகத் தொடருவார் என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications