இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி-ன் தலைவரி ஆதித்யா பூரி-ன் 2017-2018 நிதி ஆண்டுக்கான சம்பளம் 10.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
2016-2017 நிதி ஆண்டில் 8.12 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற ஆதித்யா பூரி 2017-2018 ஆண்டில் 7.26 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுள்ளார். ஆதித்யா பூரி தான் எச்டிஎப்சி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊதிய சரிவு
வங்கி பங்குகள் மற்றும் பிற நன்மைகள் என ஆதித்யா பூரியின் மொத்த ஊதியத்தில் சென்ற நிதி ஆண்டு 4 சதவீதம் சரிவு ஏற்பட்டு 9.65 கோஇ ரூபாய் ஆக உள்ளது.இதுவே 2017 மார்ச் மாதம் 10.5 கோடி ரூபாய் ஆக இருநத்து என்று வங்கியின் அறிக்கை தரவுகள் கூறுகின்றன.
எஸ்பிஐ வங்கி தலைவர்
எஸ்பிஐ வங்கி தலைவரின் ஆண்டுச் சம்பளம் 14.2 லட்சம் ரூபாய் மட்டுமே என்ற நிலையில் ஆதித்யா பூரியின் சம்பளம் 7.26 கோடி ரூபாய் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ வங்கி தலைவர் சம்பளமும் 2016-2017 நிதி ஆண்டில் 14.70 லட்சமாக இருந்த நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 14.2 லட்சம் ரூபாய் ஆகக் குறைந்துள்ளது.
ஆதித்யா பூரியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?
2016-2017 நிதி ஆண்டில் ஆதித்யா பூரியின் ஒரு நாள் சம்பளம் 2.75 லட்சம் ரூபாய் ஆக இருந்த நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 2.64 லட்சம் ரூபாய் ஆகக் குறைந்துள்ளது.
வங்கி வருவாய்
எச்டிஎப்சி வங்கியின் போட்டி நிறுவனங்களான ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் உள்ளிட்டவை வாரா கடனில் சிக்கி தவித்து வரும் நிலையில் எச்டிபெசி வங்கியின் 4-ம் காலாண்டு முடிவில் 20 சதவீத நிகர லாப உயர்வினை பதிவு செய்துள்ளது. ஆதித்யா பூரி மட்டும் இல்லாமல் எச்டிஎப்சி வங்கியின் பிற முக்கிய அதிகாரிகளின் சம்பளங்களும் குறைந்துள்ளது.
ஆதித்யா பூரியின் தலைமை
சிட்டி வங்கியில் முக்கியப் பொறுப்பில் இருந்து வந்த ஆதித்யா பூரி 1992-ம் ஆண்டு எச்டிஎப்சி வங்கி துவங்கப்பட்டதில் இருந்து தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது தலைமையில் இந்தியாவின் மதிப்பு வாய்ந்த வங்கி என்ற பெயரினை எச்டிஎப்சி பெற்றுள்ளது. வங்கியின் சந்தை மதிப்பு 5.22 லட்சம்ன் கோடியாக உள்ளது. சென்ற மாதம் பாரன்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் டாப் சிறந்த 30 தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியலில் ஆதித்யா பூரியும் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications