மும்பை: டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள் குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில் 16,000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் இந்தப் பைபேக் திட்டத்தின் கீழ் ஒரு பங்கின் விலை 2,100 ரூபாய் என 7.6 கோடி பங்குகளை வாங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது இன்றைய பங்கின் விலையை விட 15 சதவீத கூடுதல் பிரீமியம் விலை ஆகும்.
பங்கு சந்தை
டிசிஎஸ் ஆஸ்தான முதலீட்டாளர்கள் வசம் 71.92 சதவீத பங்குகள் உள்ளன. இன்றைய சந்தை நேர முடிவில் டாடா நிறுவனப் பங்குகள் 49.20 புள்ளிகள் என 2.75 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கின் விலை 1,841.45 ரூபாய் ஆக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
சந்தை மூலதனம்
பங்குகளைப் பைபேக் செய்ய இருப்பதை டிசிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் பங்குகளின் விலை 3 சதவீதம் வரை உயர்ந்து 7 லட்சம் கோடி ரூபாயாகச் சந்தை மூலதனம் கிடைத்துள்ளது.
பைபேக்
டிசிஎஸ் நிறுவனம் மும்பை பங்கு சந்தையில் பங்குகளைப் பைபேக் செய்ய இருப்பது குறித்து ஜூன் 13-ம் தேதி தெரிவித்து இருந்தது.
இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் வசம் கூடுதலாக உள்ள பணத்தினை வைத்துள்ள நிலையில் சென்ற வருடத்தில் இருந்து அதிகளவில் தொடர்ந்து பங்குகளைப் பைபேக் மூலம் பெற்று வருகின்றனர்.
பிற நிறுவனங்கள்
இன்போசிஸ் நிறுவனம் சென்ற ஆண்டு 13,000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் மூலம் வாங்கிய நிலையில் விப்ரோ நிறுவனமும் 11,000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் மூலம் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஏன் பைபேக் செய்யப்படுகிறது?
பங்குகளை நிறுவனங்கள் திரும்ப வாங்குவதன் மூலம் அவர்களின் பங்குகளின் மீதான வருவாய் அதிகரிப்பது மட்டும் இல்லாமல் சந்தை சரியும் பாதுகாப்பாக இருக்கவும் உதவி செய்கிறது.


Click it and Unblock the Notifications