இந்திய கடற்படைக்குத் தேவையான 4 போர் கப்பல் தயாரிக்கும் திட்டத்திற்கு அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினியரிங் லிமிடெட் மற்றும் லார்ச்ன் அண்ட் டியூப்ரோ நிறுவனங்களைப் பாதுகாப்புத் துறை கடைசியாகத் தேர்வு செய்துள்ளது.
ஆனால் இத்திட்டம் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்திற்குத் தான் செல்ல வேண்டும் என உயர் கடற்படை அதிகாரி தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருவதாக அனில் அம்பானி குற்றம்சாட்டியுள்ளார்.
போர் கப்பல்
இந்திய கடற்படைக்கு முக்கியத் தேவையாக இருக்கும் போர் கப்பல்களைத் தயாரிப்பதற்காக இந்திய நிறுவனங்கள் மத்தியில் ஒப்பந்தம் செய்யப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்தது. இதில் பல நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்த நிலையில் கடைசிக்கட்ட தேர்வில் ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினியரிங் லிமிடெட் மற்றும் லார்ச்ன் அண்ட் டியூப்ரோ ( L&T) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புகார்
இந்நிலையில் ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் பாதுகாப்புத் துறையிடம், உயர் கடற்படை அதிகாரியின் மகன் எஸ் அண்ட் டிபென்ஸ் வர்த்தகப் பிரிவில் பணியாற்று காரணத்தால் அவர் இத்திட்டம் எல் அண்ட் டி நிறுவனத்திற்குச் செல்ல பல வழிகளில் உதவி செய்து வருகிறார் எனப் புகார் அளித்துள்ளது.
முடக்கம்..
இந்தப் பிரச்சனைகளால் கடந்த வருடத்தில் இருந்து இத்திட்டத்தை யாருக்குக் கொடுப்பது எனப் பாதுகாப்பு அமைச்சகம் குழப்பிக் கொண்டு இருக்கிறது. இதனால் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் முடங்கிடக்கிறது.
எல் அண்ட் டி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புகாருக்குப் பதில் அளித்த எல் அண்ட் டி, இது போன்ற செயல்களில் நாங்கள் இறங்கமாட்டோம் எனக் கூறியுள்ளது. மேலும் இந்தப் புகாரில் தொடர்புடைய கடற்படை வீரர் இதுகுறித்து எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications