நாம் வாழ்க்கையைப் போல் தொழில்நுட்பமும் ஒவ்வொரு நாளும் மேம்படுட்டுக் கொண்டே இருக்கிறது. இது வளர்ச்சி பாதை என்றாலும் இந்த வளர்ச்சியில் பல தொழில்நுட்பங்கள் காணாமல் போய் வருகிறது.
அதுவும் டிஜிட்டல் மற்றும் கேஜெட் உலகில் இருக்கும் தொழில்நுட்பங்கள் மிகவும் வேகமாகக் காணாமல் போவது மட்டும் அல்லாமல் யாரும் பயன்படுத்தாமல் இறந்து போகும் நிலைக்கு தற்போது தற்போது தள்ளப்பட்டுள்ளது. அப்படி இதுநாள் வரையில் கொண்டாடப்பட்டு இறந்துகிடக்கும் 9 தொழில்நுட்பங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
விண்டோஸ் போன்
மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் நம்பிக்கையுடன் வாங்கி நோக்கிய நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்து விண்டோஸ் போன் என அறிமுகம் செய்தது. ஆனால் மைக்ரோசாப்ட் திட்டமிட்டபடி இது வெற்றி அடையவில்லை. இதுமட்டும் அல்லாமல் தற்போது மைக்சாப்ட் நிறுவனமும் இதை தோல்வி என ஒப்புக்கொண்டுள்ளது
மைக்ரோசாப்ட் கினெட்க்
எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஓன்-க்கு மோஷன் சென்சார் இயந்திரமான மைக்ரோசாப்ட் கினெட்க் 2010இல் அறிமுகம் செய்யப்பட்டு 2011இல் அதிகம் விற்கப்பட்ட இயந்திரமாக இருந்தது ஆனால் தற்போது மாயமாகியுள்ளது.
3டி டிவி
எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்பமான 3டி டிவி தற்போது காணாமல் போகியுள்ளது. மேலும் எல்ஜி மற்றும் சோனி நிறுவனங்கள் 3டி டெக்னாலஜியில் கவனத்தைச் செலுத்தியது, தற்போது டிசிஎல் நிறுவனமும் இத்துறையில் இறங்கியுள்ளது. ஆனால் இதற்கான வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பயன்பாடு அதிகளவில் குறைந்துள்ளது.
ஆப்பிள் ஐபாட்
இசை உலகையும், இசை ரசிகர்களையும் கட்டியிழுத்த ஆப்பிள் ஐபாட் தற்போது காணாமல் போயுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்த பின்பு ஐபாட் அவசியம் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
ஏஐஎம்
ஏஓஎல் இன்ஸ்டென்ட் மெசஞ்சர் சேவையான ஏஐஎம் சில வாரங்களுக்கு முன் தனது சேவையை நிறுத்தியுள்ளது.
கூகிள் டான்கோ
ஆண்டிராய்டு போன்களுக்கான ஆகுமென்டெட் ரியாலிட்டி செயலிகளை உருவாக்கும் தளமான கூகிள் டான்கோ மார்ச் 2018இல் முழுமையாக முடங்கியது.
க்ரோம் ஆப்ஸ்
விண்டோஸ், மேக் மற்றும் லினெக்ஸ் தளத்திற்கு அளிக்கப்படும் க்ரோம் வெப் ஸ்டோரில் ஆப் பிரிவு முழுமையாக நீக்கியுள்ளது.
ஜிடாக்
2005ஆம் ஆண்டில் கூகிள் நிறுவனத்தின் ஜிடாக் தற்போது கூகிள் ஹேங்அவுட் சேவையை மூலம் 2013இல் நீக்கப்பட்டது.
க்ரூவ் மியூசிக்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ரூவ் மியூசிக் டிசம்பர் 21, 2017இல் முழுமையாகத் தனது சேவையை நிறுத்தியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications