இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நகரமான பெங்களுரில் இன்னும் 2 ஆண்டுக்குப் பின் நிலத்தடி நீரில் மிகப்பெரிய அளவிலான வற்றிவிடும் என இந்திய அரசின் திங்க் டேங் அமைப்பான நித்தி அயோக் அறிவித்துள்ளது.
இதேபோல் நாட்டின் 5 மாநிலங்களில் இதே நிலை உருவாக்கியுள்ளது எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆய்வறிக்கை
நித்தி அயோக் அமைப்பின் Composite Water Management Index அறிக்கை, நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் நிலத்தடி நீர் அளவுகளில் 50 சதவீதத்தை விடக் குறைந்துள்ளது. நாட்டின் மொத்த நிலத்தடி நீரின் அளவு 54 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
உயர்வு
2015-16இல் நாட்டின் சராசரி நிலத்தடி நீர் அளவு 54.7 சதவீதமாக இருந்த நிலையில், 2016-17இல் 56.5 சதவீதமாக இருக்கிறது. மேலும் நாட்டின் மொத்த மழைநீர் வளம் 2.6 சதவீதமாக உள்ளது.
இதில் 86 சதவீதம் நீர் நகரங்களுக்கு மட்டும் விநியோகம் அளிக்கப்படுகிறது.
பெங்களுரூ
பெங்களுரில் தற்போது கட்டிடங்கள் அதிகமாகி வரும் நிலையில் மழை நீர் நிலத்தடிக்கு செல்லத் தடையாக உள்ளது, அதேபோல் மறுபுறம் பெங்களூரு நகருக்கான தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2020ஆம் ஆண்டில் பெங்களூரில் நிலத்தடி நீர் வற்றிவிடும் என நித்தி அயோக் ஆய்வுகள் கூறுகிறது.
மழை நீர்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிராமங்கள், டவுன் பகுதிகளைக் காட்டிலும், நகரப்புறங்களில் அனைத்து வீடுகள், அலுவலர்களிலும் மழை நீரைச் சேமிக்க வழியைத் தேட வேண்டும்.
வீட்டு உரிமையாளர்கள்
பெங்களூரில் தமிழர்கள் பல லட்சம் பேர் வசித்து வருகின்றனர், இந்தச் செய்தி சொந்த வீடு வைத்துள்ள தமிழர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் காவிரி பிரச்சனைக்கு முழுமையாகத் தீர்வு காணாமல் இருக்கும் நிலையில் நித்தி அயோக் அமைப்பின் ஆய்வறிக்கை கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications