ஐசிஐசிஐ வங்கியின் இடைக்காலச் சிஇஓ இவர்தான்.. சந்தா கோச்சார் நிலை என்ன..?

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகத் திகழும் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தா கோச்சா மீது தற்போது இரண்டு குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் ஐசிஐசிஐ நிர்வாகக் குழுவில் இருப்பவர்கள் சந்தா கோச்சாரை பதவி விலக வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் உயர்மட்ட நிர்வாகத்தை மாற்றும் பணியில் இறங்கியுள்ளது.

இடைக்காலச் சிஇஓ

இடைக்காலச் சிஇஓ

ஐசிஐசிஐ வங்கியின் உயர்மட்ட நிர்வாக மாற்றத்தில் முக்கிய அதிகாரிகளைப் பணி மாற்றம் செய்வது மட்டும் அல்லாமல் சந்தா கோச்சார் இடத்தில் புதிதாக ஒருவரை நியமிக்கும் பணியிலும் இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஐசிஐசிஐ வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவின் தலைவரான சந்தீப் பக்ஷி இடைக்காலச் சிஇஓவாக நியமிக்கப்படுவார் எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

 

சந்தா கோச்சார்

சந்தா கோச்சார்

தற்போது சந்தா கோச்சார் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிஎன் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரு குற்றச்சாட்டு மீதான விசாரணை முழுமையாக முடியும் வரையில் சந்தா கோச்சாருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாகவே தற்போது இடைக்காலச் சிஇஓ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 ஆலோசனை

ஆலோசனை

சந்தீப் பக்ஷி அவர்களை ஐசிஐசிஐ வங்கியின் இடைக்காலச் சிஇஓவாக நியமிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறதாகவும், இவரது நியமனம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான செய்திகள் இன்னும் ஐசிஐசிஐ நிர்வாகம் வெளியிடவில்லை.

சந்தீப் பக்ஷி

சந்தீப் பக்ஷி

1986 முதல் ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றும் சந்தீப் பக்ஷி ஐசிஐசிஐ வங்கியின் இன்சூரன்ஸ் கிளை ஐசிஐசிஐ லாம்பார்டு உருவாக்க முக்கியக் காரணமாக இருந்தார்.

2009-10 வரையில் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் ரீடைல் வங்கி பிரிவின் தலைவராக இருந்தார். அதன் பின்பு ஆகஸ்ட் 2010இல் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைப் பிரிவின் சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+