இந்திய அரசு அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்ய 100 சதவீதம் வரை வரி விதிக்கிறது இதனைக் குறைக்க வேண்டும் டொனால்டு டிரம்ப் கூறிய நிலையில் அன்மையில் இந்திய அரசும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் 30 பொருட்கள் மீதான வரியினைக் குறைப்பதாக அறிவித்தது.
ஆனால் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அதனைப் பொருட்படுத்தாமல் இந்திய ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்களை அங்கு இறக்குமதி செய்ய வரியை உயர்த்தியுள்ளது. ஆனாலும் இந்தியாவில் 30 அமெரிக்கப் பொருட்கள் மீது 240 மில்லியன் டாலர் தீர்வைகள் குறைக்க முடிவு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
வரிக் குறைப்பு
உலக வர்த்தக அமைப்பிற்குப் புதன்கிழமை அமெரிக்காவிடம் இருந்து பாதாம், ஆப்பிள்கள், பாஸ்போரிக் அமிலம் மற்றும் 800 சிசி மோட்டார் சைக்கிள் உட்பட 30 அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியைக் குறைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்திய அரசு மே மாதம் உலக வர்த்தக அமைப்பிற்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் 20 பொருட்கள் மீது 166 மில்லியன் டாலர் வரை கட்டணங்களை உயர்த்த இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் இந்திய அரசு ஹார்லிடேவிட்சன் உட்படப் பல பொருட்கள் மீதான வரியை 100-ல் இருந்து 50 சதவீதம் வரை குறைத்து இருந்தது.
விலக்கு
மேலும் இந்திய அரசு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய ஸ்டீல் மற்றும் அலுமியம் பொருட்கள் மீது விதித்துள்ள 25% மற்றும் 10% வரியில் இருந்து விலக்கு வேண்டும் என்றும் கேட்டுள்ளது. ஆனால் இதனை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
சுரேஷ் பிரபு
வர்த்தகத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு வெள்ளிக்கிழமை அமெரிக்கா சென்று இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகங்கள் குறித்து விவாதித்த நிலையில் அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதியாக மார்க் லின்ஸ்ஸ்காட் இந்தியா வர இருப்பதாகவும் இதில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுச் சுமுக முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ஜி7 மாநாடு
அதே நேரம் கனடாவில் ஜி7 மாநாட்டில் பேசிய டொனால்டு டிரம்ப் இந்தியாவில் அமெரிக்கப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. அனைவரும் கொல்லை அடிக்கக் கூடிய பிக்கி வங்கியாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications