ஜகஜால கில்லாடி நீரவ் மோடியின் தில்லாங்கடி வேலை.. 130 மில்லியன் டாலர் அபேஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் துணையோடு பல ஆயிரம் கோடியை மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, தான் மோசடி வழக்கில் சிக்கப்போவது முன்கூட்டிய தெரிந்துகொண்ட நிலையில் இந்தியாவை விட்டு வெளியேறத் திட்டமிட்டு சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற விண்ணப்பம் செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

 

மேலும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த பணத்தை நீரவ் மோடி ஸ்மார்ட்டாக யோசித்துத் தனது தங்கை கணக்கிற்குப் பணப் பரிமாற்றம் செய்துள்ளார்.

சிங்கப்பூர் குடியுரிமை

சிங்கப்பூர் குடியுரிமை

குளோபல் இன்வெஸ்டார் ப்ரோகிராம் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிங்கப்பூரில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்வதன் மூலம் சிங்கப்பூர் குடியுரிமை பெற முடியும்.

இதே வழியில் நீரவ் மோடி தான் மாதம் 1,50,000 சிங்கப்பூர் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 75 லட்சம் சம்பளம் பெறுவதாகக் கூறி தனக்கும் தன் குடும்பத்திற்கும் குடியுரிமை வேண்டும் என விண்ணப்பம் செய்துள்ளார்.

 

 நிராகரிப்பு..

நிராகரிப்பு..

இந்த விண்ணப்பம் ஜனவரியில் நீரவ் மோடி விண்ணப்பத்தைக் காலத்தில் தான் சிபிஐ வங்கி மோசடி குறித்து இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. சிபிஐ வழக்கின் அடிப்படையாகச் சிங்கப்பூர் நீரவ் மோடிக்குக் குடியுரிமை வழங்க மறுத்தச் செய்து தற்போது வெளியாகியுள்ளது.

 தங்கை பூர்வி மேத்தா
 

தங்கை பூர்வி மேத்தா

இதோடு பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த பல ஆயிரம் கோடி பணத்தைப் பல வகையில் கைமாற்றித் தனது தங்கை கணக்கிற்கு அனுப்பிப் பணத்தைப் பாதுகாத்துள்ளார் நீரவ் மோடி.

 தில்லுமுல்லு வேலைகள்

தில்லுமுல்லு வேலைகள்

இந்த ஜகஜால கில்லாடி நீரவ் மோடி செய்த வேலையைப் பார்த்தால் தலையே சுற்றிவிடும். நீரவ் மோடி மற்றும் அவரது தங்கை பூர்வி மேத்தா இடையில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நீரவ் மோடி செய்த தில்லுமுல்லு வேலைகளை இப்போது பார்ப்போம்.

வழக்கு 1

வழக்கு 1

போலி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி பெற்ற கடன் துபாயில் இருக்கும் போலி நிறுவன கணக்குகளுக்குச் சென்ற பணம் 65 மில்லியன் டாலர் பணத்தை, நீர்வ மோடியின் தங்கை பூர்வி மேத்தா நிர்வாகம் செய்யும் துபாய் பைன் கிளாசிக் FZE நிறுவன கணக்கிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இந்த 65 மில்லியன் டாலர் பணத்தைக் கொண்டு ஹாங்காங்-இல் இருக்கும் நீரவ் மோடியின் பையர்ஸ்டார் ஹோல்டிங் நிறுவனத்தின் பங்குகளைப் பைன் கிளாசிக் FZE நிறுவனம் பூர்வி மேத்தா பெயரில் வாங்கியுள்ளது.

இந்தப் பங்குகளை விற்றுப் பூர்வி மேத்தா தனது சொந்த கணக்கில் அதாவது பர்சனல் கணக்கில் 65 மில்லியன் டாலர் பெற்றுள்ளார்.

 

 வழக்கு 2

வழக்கு 2

துபாயில் நிறுவனங்கள் இருப்பதாக நீரவ் மோடி சமர்ப்பித்த போலி ஆவணங்கள் அடிப்படையில் பஞ்சாப் நேஷனல் வங்கி கொடுத்த கடனில் 35 மில்லின் டாலர் தொகை நீரவ் மோடியின் பையர்ஸ்டார் ஹோல்டிங் கணக்கிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பூர்வி மேத்தாவிடம், நீரவ் மோடி கட்டுப்பாட்டின் கீழ் இரு கிளை நிறுவனங்களான சினர்ஜி கார்ப்பரேஷன் USA மற்றும் ஜாஃபெல் USA ஆகியவை தலா 15 மில்லியன் டாலர் பணத்தைக் கடனாக வாங்கியுள்ளது என ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையாகப் பையர்ஸ்டார் ஹோல்டிங் கணக்கில் இருந்து இவ்விரு கிளை நிறுவனங்களுக்கும் 20 மில்லியன் டாலர், 15 மில்லியன் டாலர் பணத்தை அளித்து, அதன் மூலம் பூர்வி மேத்தாவிடம் வாங்கிய கடனை திருப்பி அளித்துள்ளதாகக் கணக்கை முடித்துள்ளார் நீர்வ மோடி.

 

வழக்கு 3

வழக்கு 3

துபாய் போலி நிறுவன கணக்குகளுக்கு வந்த 30 மில்லியன் டாலர் பணம் பூர்வி மேத்தாவின் கணவர் மையாங் மேத்தா வங்கி கணக்கிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 30 மில்லியன் டாலர் பணத்தை மையாங் மேத்தா, பூர்வி மேத்தாவிற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்.

இந்தத் தொகையில் 20 மில்லியன் டாலர் பணத்தைப் பாங்க் ஆஃப் இந்தியாவில் வைப்பு நிதியாக டெப்பாசிட் செய்துள்ளார். வைப்பு நிதி ஆவணத்தின் அடிப்படையில் பிரிட்டன் வங்கியில் கடன் பெற்ற பூர்வி மேத்தா 3 வருடங்களுக்கு முன்பு இரு கணக்குகளையும் மூடியுள்ளார்.

 

மாஸ்டர் மைண்ட்

மாஸ்டர் மைண்ட்

இப்படிப் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வர்த்தகத்திற்காகப் பெற்ற கடன் அனைத்தையும் முறைகேடாகப் பயன்படுத்து பெரிய அளவிலான ஆதாயம் அடைந்துள்ளார் நீரவ் மோடி.

இந்த முறைகேட்டில் தற்போது இவரது தங்கை பூர்வி மேத்தா மற்றும் அவரது கணவர் மையாங் மேத்தா ஆகியோரும் தொடர்புள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirav Modi brilliantly diverted money into his sister Purvi account

Nirav Modi brilliantly diverted money into his sister Purvi account
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X