கூகிள் நிறுவனத்தின் மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..!

டெக் உலகில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் இடையில் எப்போதுமே ஒரு அமைதியான போர் நடந்துகொண்ட இருக்கும்.

அந்த வகையில் மைக்ரோசாப்ட் தற்போது பல புதிய நிறுவனங்களைக் கைப்பற்றிய வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் வேகமான விரிவாக்கம் செய்து வரும் நிலையில் கூகிள் நிறுவனம் தன் பங்கிங்கு வேலையைச் செய்து வருகிறது.

தற்போது கூகிள் ஆல்பபெட் நிறுவனத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் திட்டங்கள் அனைத்தும் நீண்ட கால மற்றும் எதிர்காலத் தேவைக்கானது என்பதால், ஆல்பபெட் நிறுவனம் உடனடி வர்த்தக விரிவாக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்திருப்பது ஈகாமர்ஸ்.

 இந்தியா

இந்தியா

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான் நிறுவனத்தை விரட்டியடிக்க ஏற்கனவே பிளிப்கார்ட், மைக்ரோசாப்ட், ஈபே கூட்டணியில் தற்போது வால்மார்ட் இணைந்துள்ளது. இந்நிலையில் கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்-உம் இக்கூட்டணியில் சேர திட்டமிட்டுள்ளது.

இக்கூட்டணியில் சேர்வதன் மூலம் கூகிள் உலகிலேயே அதிக இண்டர்நெட் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவில் நுழையும்.

 

சீனா

சீனா

இந்தியாவிற்கு அடுத்தபடியாகச் சீனாவில் தான் அதிக இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

சீனாவில் ஏற்கனவே கூகிள் தனது தேடல் தள வர்த்தகத்தில் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் தற்போது ஈகாமர்ஸ் துறையில் நுழைய முடிவு செய்துள்ளது.

 

JD.com

JD.com

சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் வர்த்தகத் தளமான JD.com நிறுவனத்தில் ஆல்பபெட் சுமார் 550 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளது.

JD.com நிறுவனத்தின் கிளாஸ் ஏ பங்குகளை 20 டாலர் மதிப்பில் வாங்கியுள்ளது. அமெரிக்க வைப்பில் (ADS) இதன் மதிப்பு 41 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விரிவாக்கம்

விரிவாக்கம்

ஆல்பபெட் மற்றும் JD.com கூட்டணி பல்வேறு ஈகாமர்ஸ் சேவைகளை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதன் கூகிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக அளவு அதிகளவில் உயரும் எனத் தெரிகிறது.

 

பிரான்ஸ்

பிரான்ஸ்

சில வாரங்களுக்கு முன்பு ஆல்பபெட், பிரான்ஸ் நாட்டின் மளிகை மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் Carrefour என்னும் ஈகாமர்ஸ் நிறுவனத்தை வாங்கியது.

இதன் மூலம் பிரான்ஸ் நாட்டின் உள்ள மக்கள் தங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட் என அனைத்து இயந்திரங்களின் வாயிலாகக் கூகிள் சேவையைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்க முடியும்.

 

முக்கியத் திட்டம்

முக்கியத் திட்டம்

தற்போது JD.Com நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் சேவையைக் கூகிள் பயன்படுத்தி அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் விரிவாக்கம் செய்யும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+