டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயக்கும் மொபைல் சேவைகளை அளித்து வரும் க்யூப் 26 நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் நிறுவனமான பேடிஎம் வாங்கியுள்ளது.
க்யூப் 26 நிறுவனம் இதுவரை சுமார் 7.7 மில்லியன் டாலர் முதலீட்டை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளராக டைகர் குளோபல் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் திகழ்கிறது.

இந்நிலையில் க்யூப் 26 நிறுவனம் இனி பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. மேலும் க்யூப் 26-இன் சேவை பேடிஎம் நிறுவன சேவையை இணைப்பதன் மூலம் சமுக இணைப்பை மேம்படுத்தி, சேவை மற்றும் வாடிக்கையாளர் சேவையை மிகப்பெரிய அளவில் மேம்படுத்த உள்ளது.
2012ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட க்யூப் 26 நிறுவனத்தைச் சவ்ரவ் குமார், அபிலேக் குமார் அகர்வால் ஆகியோர் நிறுவனர். இந்நிறுவனம் முன்னர்ப் பிரெடிக்ட்கேஸ் என்னும் பெயரில் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது க்யூப் 26 நிறுவனம் மெஷின் லேர்னிங், எண்டர்பிரைசர்ஸ் சாப்ட்வேர் இன்னும் பல முக்கியத் தொழில்நுட்பங்களில் பணியாற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications