2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தினை விட 2018 ஏப்ரல் மாதத்தில் 66 வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது 22 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அதன் மதிப்பு 2.65 லட்சம் கோடி ரூபாய் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை முந்தைய ஏப்ரல் மாதத்தில் 2.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்க பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்றும் தரவுகள் கூறுகின்றன.
ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கியானது ஒவ்வொரு மாதமும் ஏடிஎம் மையங்கள் மற்றும் பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் எண்ணிக்கை குறித்த தரவுகளை வெளியிட்டு வருகிறது.
2018 ஏப்ரல் மாதம்
2018-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 76 கோடி ஏடிஎம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும் அதன் மதிப்பு 2.65 லட்சம் கோடி என்றும் தரவுகள் கூறுகின்றன.
2017 ஏப்ரல் மாதம்
2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒரே இரவில் செல்லாது என்று அறிவித்த பிறகு வந்த முதல் 2017-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 2.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏடிஎம் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.
ஏடிஎம் பரிவர்த்தனை போன்று இதுவும் அதிகரிப்பு
ஏடிஎம்-ல் பணம் எடுப்பது அதிகரித்து இருக்கும் அதே நேரத்தில் பிஓஎஸ் இயந்திரங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்வதும் அதிகரித்துள்ளது எனத் தரவுகள் கூறுகின்றன.
டெபிட் கார்டு பிஓஎஸ் பரிவர்த்தனைகள்
2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிஓஎஸ் இயந்திரங்களில் 33 கோடி டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது அதன் மதிப்பு 45,500 கோடி ரூபாய் என்றும் இதுவே சென்ற ஆண்டு 27 கோடி பரிவர்த்தனைகளின் மதிப்பு 38,000 கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளனர்.
கிரெடிட் கார்டு பிஓஎஸ் பரிவர்த்தனைகள்
2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிஓஎஸ் இயந்திரங்களில் 13 கோடி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது அதன் மதிப்பு 44,834 கோடி ரூபாய் என்றும் இதுவே சென்ற ஆண்டு 10 கோடி பரிவர்த்தனைகளின் மதிப்பு 31,142 கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கி
மத்திய வங்கியானது ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியாவில் பணப் பரிவர்த்தனை மீண்டும் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்து இருந்தது.
ரொக்க பணம்
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது மக்களிடம் 7.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மக்களிடம் 18.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்க பணம் உள்ளது.
2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மக்களிடம் 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்க பணம் இருந்த நிலையில் தற்போது 2018 ஏப்ரல் மாதம் 18.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்க பணம் உள்ளது என்று ஆர்பிஐ தரவுகள் கூறுகின்றன.
பேப்பால் ஆய்வு
ஆசிய சந்தையில் என்ன தான் இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் வளர்ச்சிகள் அதிகளவில் இருந்தாலும் டிஜிட்டல் பரிவர்த்தனையினை விட ரொக்க பணப் பரிவர்த்தனை தான் அதிகளவில் உள்ளது என்று பேப்பால் ஆய்வு அறிக்கையும் கூறியுள்ளது. இதனைப் பார்க்கும் போது 57 சதவீத இந்தியர்கள் டிஜிட்டல் அல்லது பணமில்லா பொருளாதாரத்தினை விரும்பவில்லை என்று தான் தெரிகிறது.


Click it and Unblock the Notifications