பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அன்மையில் விவசாயிகளுடன் உரையாடிய போது பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை அளிக்க முடிவு செய்ய உள்ளதாகவும் விரைவில் இது செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து இருந்த நிலையில் 10 வருட அரசு பத்திரங்கள் மீதான லாபம் சரிந்துள்ளது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்ச ஆதார விலை
2019-ம் ஆண்டுத் தேர்தல் வர உள்ள நிலையில் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளுக்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை எனப்படும் MSP-க்கு அறிவிப்பினை வெளியிட வாய்ப்புகள் உள்ளது எனவே பணவீக்கம் அதிகரிக்கும் நிலையும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பத்திரங்கள் லாபம் சரிவு
இந்நிலையில் 10 வருட அரசு பத்திரங்கள் மீதான லாபமானது 7.865 சதவீதத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை 7.843% ஆகச் சரிந்துள்ளது. பத்திரங்களின் வருவாய் மற்றும் விலைகள் நேர் எதிராகச் சென்று கொண்டு இருக்கின்றன.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி அவர்கள் 2022-ம் ஆண்டு விவசாயிகளின் வருவாயினை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ
செவ்வாய்க்கிழமை காலை வரை அரசு பத்திரங்கள் 7.786 சதவீத லாபத்தினை அளித்து வரும் நிலையில் ஆர்பிஐ 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 5 விதமான முதிர்வுகளை அளிக்கும் பத்திரங்களை 2018 ஜூன் 21-ம் தேதி வாங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
ரூபாய் மதிப்பு
ஜூன் மாதம் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட அறிவிப்பினை வெளியிட்ட பிறகு வர்த்தகர்களும் கவனமாக இருக்கின்றனர். 2018-ம் ஆண்டில் இது வரை 6.6% வரை இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் 590.60 மில்லியன் டாலர் பங்கு சந்தை முதலீடு மற்றும் 5.37 பில்லியன் டாலர் டெபட் முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றதே ஆகும்.
சென்செக்ஸ்
அதே நேரம் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் ஜனவரி மாதம் இருந்ததை விட 3.61 சதவீதம் உயர்வைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications