பாரத ஸ்டேட் வங்கி (SBI) பல்வேறு வகையான காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. பாதுகாப்புத் திட்டங்கள், ஓய்வுக்காலத் திட்டங்கள், குழந்தைகள் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறு வகையான திட்டங்களை வழங்குகிறது.
தனிநபர்களுக்கு ஏற்படும் கடுமையான நோய் மற்றும் மரணம் போன்ற பாதிப்புகளில் இருந்து விரிவான பாதுகாப்புத் தரும் வகையில் பூரணச் சுரக்ஷா ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்னும் புதிய திட்டத்தை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 36 வகையான கடுமையான நோய்களுள் ஏதாவது ஒன்றால் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ உதவிக்காக ஒரு பெரும் தொகையை இத்திட்டத்தின் மூலம் வழங்குகிறது. அதுமட்டும் அல்லாமல் அதற்குப் பிறகு செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்கிறது. இத்திட்டத்திற்குச் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரி விலக்குப் பெற்றுக் கொள்ளலாம்.
வயது
எஸ்பிஐ ஆயுள் காப்பீடு பூரணச் சுரக்ஷா திட்டத்தில் இணைவதற்குக் குறைந்தபட்ச வயது 18. அதிகபட்ச வயது 65. காப்பீட்டுத் திட்டம் முதிர்வடைவதற்கான குறைந்தபட்ச ஆண்டு 28. அதிகப்பட்டச ஆண்டு 75.
கால வகைகள்
இக்காப்பீட்டுத் திட்டத்தில் 10 முதல் 30 ஆண்டுகள் வரையிலான 5 வகையான காலப் பகுப்பில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். 10, 15, 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் என 5 வகையான திட்டங்கள் உள்ளன. இத்திட்டத்தின் பயனை முழுமையாகப் பெற பிரீமியம் தொகையை முறையாகச் செலுத்த வேண்டும். வருடத்திற்கொருமுறை, ஆறு மாதத்துக்கு ஒருமுறை அல்லது மாதந்தோறும் எனப் பிரிமீயம் கட்டுவதற்கு மூன்றுவகையான வாய்ப்புகள் உள்ளன.
பிரீமியம் செலுத்துதல்
ஆறு மாதத்திற்கு ஒரு முறை பிரிமீயம் தொகை கட்டினால் ஆண்டுப் பிரிமீயத்தில் 51 சதவிகிதமும் மாதத்திற்கு ஒரு முறை கட்டினால் ஆண்டுப் பிரீமியத்தில் 8.50 சதவிகிதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
குறைந்தபட்ச பிரீமியம்
இத்திட்டத்திற்கான குறைந்தபட்ச பிரீமியத் தொகை மாதத்திற்கு ரூ.250. ஆறு மாதத்திற்கு ரூ.1500. வருடத்திற்கு ரூ.3000. இத்திட்டத்திற்காக அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு ரூ.80,000, ஆறுமாதத்திற்கு ரு.4,75,000 மற்றும் ஆண்டுக் கணக்கின் அடிப்படையில் 9,32,000 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications