ஐஆர்சிடிசி இணையதளம், செயலி மற்றும் யூடிஎஸ் செயலிகளில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது டெபிட், கிரெடிட் மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது போன்று தற்போது பேடிஎம், மொபிகுவிக் போன்ற வாலெட் நிறுவனங்களின் உதவியுடன் பணத்தினைச் செலுத்தும் முறையும் உள்ளது.
தற்போது அதற்கு மாற்றாக ஐஆர்சிடிசி நிறுவனம் நேரடியாக ஐபே என்ற வாலெட் சேவை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
எப்போது அறிமுகம்?
ஐஆர்சிடிசி நிறுவனத்தின் டிவிட்டர் பதிவில் 2018 ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஐபே வாலெட் சேவையினை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஐஆர்சிடிசி ஐபே வாலெட்
ஐஆர்சிடிசி ஐபே செயலியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, வெளிநாட்டுக் கார்டுகள், யூஇஐ போன்றவை மூலம் பணத்தினைச் சேர்க்க முடியுமாம்.
ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு
ஐஆர்சிடிசி மற்றும் எஸ்பிஐ நிறுவனங்கள் இணைந்து ஐஆரிசிடிசி எஸ்பிஐ கார்டு என்ற சேவையினை வழங்கி வருகின்றன. இதன் மூலம் ஏசி1, ஏசி2 மற்றும் சிசி ரயில் டிக்கெட்களைப் புக் செய்யும் போது 10 சதவீதம் வரையில் வேலுபேக் சலுகை அளிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு முறை ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு மூலம் டிக்கெட் புக் செய்யும் போதும் பயணிகளுக்கு 1.8 சதவீதம் கட்டண சலுகையும் அளிக்கப்பட்டு வருகிறது.
ஐஆர்சிடிசி எஸ்பிஐ பிளாட்டினம் கார்டு
ஐஆர்சிடிசி எஸ்பிஐ பிளாட்டினம் கார்டு வாங்கிய 45 நாட்களுக்குள் 500 ரூபாய் செலவு செய்தால் 350 ரூபாய் கேஷ்பாக் கிடைக்கிறது. மேலும் 30 நாட்களுக்குள் ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் 100 ரூபாய் கேஷ்பேக் அளிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது செயலாக்க கட்டணமும் இல்லை என்பதுடன் பெட்ரோல், டீசல் வாங்கும் போது சலுகைகளை அளிக்கிறது.
ஐஆர்சிடிசி எஸ்பிஐ பிளாட்டினம் கார்டினை பெறுவது எப்படி?
ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு வேண்டும் என்றால் www.sbicard.com சென்று விண்ணப்பிக்கலாம். இல்லை என்றால் மொபைல் போனில் இருந்து 56767 என்ற எண்ணிற்கு RAIL என எஸ்எம்எஸ் அனுப்பியும் ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications