இந்திய இ-காமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இடையில் மிகப் பெரிய போட்டி இருந்த வந்த நிலையில் வால்மார்ட் வந்ததற்குப் பிறகு அது அடுத்தக் கட்டத்திற்குச் சென்றுள்ளது.
முன்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அதிகச் சலுகைகளை இ-காமர்ஸ் நிறுவனங்கள் வழங்கி வந்த நிலையில் தற்போது அதிகப் பொருட்கள் மற்றும் விற்பனையாளர்கள் வேண்டும் என்பதால் விற்பனை கட்டணத்தினைக் குறைக்க முடிவு செய்துள்ளன.
கட்டண குறைப்பு
அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் விற்பனையாளர்கள் கட்டணம் எனப்படும் பரிந்துரை கட்டணங்களைச் சில பிரிவுகளில் 8 சதவீதம் வரையிலும், ஆடை ஆபரணங்கள் பிரிவுகளில் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும், மரச்சாமான்கள் பிரிவில் 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் பரிந்துரை கட்டங்களைக் குறைத்துள்ளது.
பரிந்துரை கட்டணங்கள் என்றால் என்ன?
பரிந்துரை கட்டணம் என்பது ஒரு பொருளின் மொத்த விலையில் வணிகர்களால் அமேசானுக்குச் செலுத்தப்பட்டு வந்த கட்டணம் ஆகும். இதில் பேக்கேஜ் மற்றும் டெலிவரி கட்டணங்களும் அடங்கும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட்
அமேசான் மட்டும் இல்லாமல் அன்மையில் பிளிப்கார்ட் நிறுவனமும் தங்களது பரிந்துறை கட்டணங்களைக் குறைத்துள்ளது.
இ-காமர்ஸ் சந்தை
பிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கியதை அடுத்து அமேசான் நிறுவனம் செய்துள்ள இந்த விற்பனையாளர்கள் கட்டண குறைப்பு என்பது இ-காமர்ஸ் சந்தையில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பைச் சாதகமாக்கும் அமேசான்
வால்மார்ட்-பிளிப்கார்ட் இணைவிற்குப் பிறகு வணிகர்களிடம் மிகப் பெரிய எதிர்ப்பைச் சந்தித்து வரும் நிலையில் அவர்களைக் கவரும் விதமாகவும் அமேசானின் அறிவிப்பு உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்
அமேசானின் விற்பனையாளர் கட்டண குறைப்பினால் விற்பனையாளர்கள் தங்களது பொருட்களின் விலையினைக் குறைப்பார்களே ஆனால் வாடிக்கையாளர்களும் அதிகளவில் பயன்பெறுவார்கள் என்பதில் எந்த அய்யமும் இல்லை.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications