பாஜக கட்சி தலைவரான அமிஷ் ஷா இயக்குனராக உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் செய்த போது அதிகளவிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது ஆர்டிஐ அளித்த பதில் மூலம் தெரியவந்துள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 2016 நவம்பர் 14 முதல் அனைத்துக் கூட்டுறவு வங்கிகளிலும் பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற தடை விதிக்கப்பட்டது.
ஏடிசி கூட்டுறவு வங்கி
ஏடிசி என்ற கூட்டுறவு வங்கியில் 2000-ம் ஆண்டின் போது அமித் ஷா தலைவராக இருந்த நிலையில் தற்போது இயக்குனராக உள்ளார். ஏடிசி வங்கியில் 2017 மார்ச் 31-ம் தேதி வரையிலான கணக்கின் படி 5,050 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் 2016-2017 நிதி ஆண்டில் 14.31 கோடி ரூபாய் நிகர லாபத்தினையும் வங்கி பெற்றுள்ளது.
ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கி
ஏடிசி வங்கிக்கு அடுத்தபடியாக ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் தலைவராக ஜெயேஷ்பாய் விட்டல்பாய் ரேடடியா உள்ள நிலையில் இவர் குஜராத் முதல்வராக விஜய் ரூபானி இருந்த போது அவரது அமைச்சர்களில் ஒருவராக இருந்துள்ளார். ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கி கணக்கில் மட்டும் 693.19 கோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.
ராஜ்கோட்
ராஜ்கோட் தான் குஜராத் பாஜக அரசியலின் முக்கிய மையம் ஆகும். 2001-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் வென்று தான் நரேந்திர மோடி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
குஜராத் மாநில கூட்டுறவு வங்கி
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் குஜராத் மாநில கூட்டுறவு வங்கியில் வெறும் 1.11 கோடி ரூபாய் மட்டும் தான் பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்ட நிலையில் அகமதாபாத் ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மட்டும் 693.19 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதே ஆகும்.
ஆர்டிஐ ஆர்வலர்
மும்பையினைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரனா மனோரஞ்சன் எஸ் ராய் என்பவர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று கேட்ட கேள்விக்கு இந்தப் பதில் வந்துள்ளது.
இந்த ஆர்டிஐ தகவலினை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளரான எஸ் சரவணவேல் அளித்துள்ளார்.
பாதிக்கும் அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற்ற வங்கிகள்
மேலும் 7 பொதுத் துறை வங்கிகள், 32 மாநில கூட்டுறவு வங்கிகள், 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் சில தபால் அலுவலகங்களில் இருந்து மட்டும் 7.91 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளது. இது பண மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நீட்டுகளில் 52 சதவீதம் ஆகும்.
வங்கிகள் வாரியான நிலவரம்
அதிலும் 7 பொதுத் துறை வங்கிகளின் 92,500 கிளிகளில் 29,000 கிளைகளில் இருந்து 7.57 லட்சம் கோடி ரூபாயும், 32 மாநில கூட்டுறவு வங்கிகள் 6,407 கோடி ரூபாயும், 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 22,271 கோடி ரூபாயும், 39 தபால் அலுவலகங்களில் 4,408 கோடி ரூபாயும் பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டுள்ளது. மீதம் உள்ள 14 பொதுத் துறை வங்கிகளும் தங்களது விவரங்களை அளிக்கவில்லை. நாடு முழுவதும் 1,55,000 தபால் அலுவலகங்கள் உள்ளன.
மத்திய அரசு அறிவிப்பு
பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 15 மாதங்களுக்குப் பிறகு மத்திய அரசு 15.44 லட்சம் கோடி ரூபாய் அதாவது 99 சதவீத பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளதாக அறிவித்தது.
சந்தேகம்
ஒரு நாட்டின் பாதிக்கும் அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளைச் சில பொதுத் துறை வங்கி கிளைகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் மட்டும் பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக இதனை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்றும் மீதம் உள்ள 14 பொதுத் துறை வங்கிகள், தனியா வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் எல்லாம் வெறும் 48 சதவீத பழைய ரூபாய் நோட்டுகளை மட்டும் தான் திரும்பப்பெற்றனவா என்று ஆர்டிஐ ஆர்வளாரான மனோரஞ்சன் எஸ் ராய் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதி
மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்குப் பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற 5 நாட்கள் மட்டுமே பெற அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு 2016 டிசம்பர் 30 வரை என 7 வாரங்கள் பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
மோடி
பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 8-ம் தேதி செல்லாது என்று அறிவித்த போது நவம்பர் 10-ம் தேதி முதல் 2016 டிசம்பர் 30 வரை 50 நாட்களுக்கு எந்த ஒரு வரம்பும் இல்லாமல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் பயம் இல்லாமல் டெபாசிட் செய்யலாம் என்று தெரிவித்து இருந்தார்.
கூட்டுறவு வங்கிகள்
கூட்டுறவு வங்கிகளை அதிகளவில் அரசியல் வாதிகள் மற்றும் கட்சிகளே நடத்தி வரும் நிலையில் 2017-ம் ஆண்டு 32 மாநில கூட்டுறவு மற்றும் 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகளைத் துவங்க அனுமதி அளித்தது. மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி பெறும் அளவில் எதிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
Source: தி குவிண்ட்
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications