முகேஷ் அம்பானியால் கேபிள் டிவிக்கு மூடுவிழா.. இனி நடக்கபோவது இதுதான்..!

டாடா குழுமம், ஜப்பான் டெலிகாம் சேவை நிறுவனமான டோகோமோ உடன் சேர்ந்து இந்தியாவில் முதல் முறையாக 3ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. அதோடு 1 பைசாவுக்கு 1 நொடி என அழைப்புகளுக்குக் கட்டணத்தை நிர்ணயம் செய்த போது இந்திய மக்களின் மத்தியில் அழைப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்த காலகட்டத்தில் மளமளவென உயர்ந்தது. இது இந்திய டெலிகாம் சந்தையில் இன்றளவும் ஒரு முக்கிய மாற்றமாகக் காணப்படுகிறது.

இந்த மாற்றத்தைத் தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிகப்பெரிய டெலிகாம் புரட்சி இண்டர்நெட் டேட்டா வாயிலாகத் தற்போது வெடித்துள்ளது. ஆம், ஜியோ அறிமுகத்திற்கு முன் இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்கள் மத்தியில் சராசரியாக 23 எம்பி-யாக இருந்த இண்டர்நெட் பயன்பாட்டு அளவு இன்று 1.5ஜிபி அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த அபரிவிதமான வளர்ச்சியில் ஜியோவுடன் போட்டி போட வேண்டும் எனச் சக போட்டி நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தகம் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இந்த வளர்ச்சியால் அடுத்தச் சில வருடங்களில் கேபிள் டிவி காணாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.

ஜியோ வாடிக்கையாளர்கள்

ஜியோ வாடிக்கையாளர்கள்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தில் இருக்கும் டெலிகாம் வாடிக்கையாளர்களில் 90 சதவீதம் பேர் இண்டர்நெட் டேட்டாவை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் பெரும்பாலானோர் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்காகவே பயன்படுத்துவதாகப் பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரிலி லின்ச் அமைப்பு செய்த ஆய்வறிக்கை கூறுகிறது.

 

மனநிலை

மனநிலை

ஜியோ வாடிக்கையாளர்கள் பொருத்த வரையில், அதிகமானோர் டவுன்லோடு செய்யப் பயன்படுத்துவதில்லை, ஆனால் வீடியோ பார்ப்பதிலும், லைவ் டிவியைப் பார்ப்பதிலும் அதிகமான டேட்டாவை செலவு செய்கின்றனர்.

மேலும் ஜியோ சேவைகளில் அதன் வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்துவதும் இந்த ஜியோ டிவி செயலிலையைத் தான்.

 

போட்டி

போட்டி

தற்போது டெலிகாம் சந்தையில் ஜியோவிற்குச் சக போட்டி நிறுவனமாக இருக்கும் ஏர்டெல்லும் இதேபோன்ற சேவையை வழங்குகிறது. ஆனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதை மதிப்பதே இல்லை.

ஏர்டெல் டிவி செயலியை 10 மில்லயன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் நிலையில் ஜியோ டிவி செயலியை 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 

 ஜியோ சேவைகள்

ஜியோ சேவைகள்

ஜியோ நிறுவனத்தில் தற்போது 200 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் அதிகமானோர் இருக்கும் நிலையில் ஜியோ டிவி சேவையைச் சுமார் 73 சதவீதம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் ஜியோ மியூசிக் 60%, ஜியோ சினிமா 42%, ஜியோ சாட் 33%, ஜியோ மனி 32%, ஜியோ எக்ஸ்பிரஸ் நியூஸ் 20%, ஜியோ மேக்ஸ் 16%, ஜியோ கிளவுட் 15% வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் ஜியோ சேவைகளைப் பயன்படுத்தாமல் சுமார் 8 சதவீத வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

 

டேட்டா பயன்பாடு

டேட்டா பயன்பாடு

ஜியோவிற்கு முன் வெறும் 23எம்பியாக இருந்த சராசரி டேட்டா பயன்பாடு இன்று கிட்டத்தட்ட 2 ஜிபி அளவிற்கு உயர்ந்துள்ளது.

அடுத்த 5 வருட காலத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு பெரிய அளவில் உயரப்போகும் நிலையில் சராசரி டேட்டா பயன்பாடு அளவு 18 ஜிபி ஆக இருக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.

 

இண்டர்நெட்

இண்டர்நெட்

இந்நிலையில் இண்டர்நெட் வாயிலாகவே நாம் இருந்த இடத்திலேயே அனைத்து டிவிகளையும் நேரலையாகப் பார்க்க முடியும் நிலையில், அடுத்த 5 வருடத்தில் கேபிள் டிவியே தேவையில்லாத நிலை உருவாகும் என்றால் மிகையாகாது.

கேபிள் டிவி

கேபிள் டிவி

ஜியோவின் வளர்ச்சியால் சில நன்மைகள் மக்களுக்குக் கிடைத்தாலும், கேபிள் டிவி முடங்கும் அபாயம் உள்ள இந்த மோசமான நிலை கூட உருவாகும் என்பது வருத்தமாகவும் உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் பலவற்றை நம்முடைய பயன்பாட்டில் இருந்து அகற்றியுள்ளோம். அந்த வகையில் கூடிய விரைவில் கேபிள் டிவி என்பதும் காணாமல் போகும்.

 

டிவி இணைப்பு

டிவி இணைப்பு

அதுமட்டும் அல்லாமல் தற்போது நம் வீடுகளில் சாதாரணப் பிச்சர் டியூப் டிவிகள் அனைத்தும் ஸ்மார்ட் டிவியாக மாறி வரும் நிலையில் ஜியோ டிவி செயலியை ஸ்மார்ட் டிவிகளிலும் பயன்படுத்த முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+