அமெரிக்கா ஸ்டீல் மற்றும் அலுமியன் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதை அடுத்து அதிகளவில் அமெரிக்காவிற்கு ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்தியாவும், சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியினை உயர்த்தித் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன.
இந்திய அரசு அமெரிக்காவிற்கு எதிராகத் தங்களது எதிர்பினை காண்பிக்க உடனடியாக 28 பொருட்கள் மீதான வரியினை உயர்த்தியது மட்டும் இல்லாமல் ஆர்த்தீமியா என்ற ஒரு வகையான இறாலுக்கு மட்டும் ஆகஸ்ட் 4 முதல் வரியினை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளது.
வர்த்தகப் போர்
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் வர்த்தகப் போர் நிகழ வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது சீனா, இந்தியாம் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தற்போது வர்த்தகப் போரினை எழுப்பி வருகிறது.
அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா வரியினை உயர்த்தியதை அடுத்து ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரியினை வித்துள்ளன.
விலை உயரும் பருப்புகள்
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பட்டாணி, கடலைப் பருப்பு, மசூர் பருப்பு போன்றவற்றின் மீது 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாகவும், அவரைப் பருப்புகள் மீது மீது 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும் இறக்குமதி வரியினை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பாதாம்
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பொருட்களுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் இறக்குமதி வரி இருந்து வந்த நிலையில் தற்போது 120 ரூபாய் என அதிகரித்துள்ளது. அதே நேரம் உரிக்கப்படாத பாதாம் பருப்புகள் மீது கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய் என்று இருந்த வரி 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
அமிலங்கள்
போரிக் அமிலம் மீது 17.50 சதவீதமாகவும், 10 சதவீதமாக இருந்த போஸ்பாரிக் அமிலம் மீது 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் இறக்குமதி வரியினை உயர்த்தியுள்ளனர்.
இரும்பு மற்றும் ஸ்டீல்
குறிப்பிட்ட இரும்பு தகடுகள் போன்றவற்றுக்கு 15 சதவீதத்தில் இருந்து 27.50 சதவீதமாகவும், துருப்பிடிக்காத ஸ்டீல்பொருட்கள் மீது 15 சதவீதத்தில் இருந்து 22.50 சதவீதமாகவும் இறக்குமதி வரியினை உயர்த்தியுள்ளனர்.
ஆர்த்தீமியா
ஆர்த்தீமியா என்ற இறால் வகை மீது ஆகஸ்ட் 4 முதல் 30 சதவீதமாக இறக்குமதி வரியினை உயர்த்த இருப்பதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இணையான வரி
அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு இறக்குமதி செய்ய எவ்வளவு வரி விதித்துள்ளதோ அதற்கு இணையான அளவிற்கே இந்திய அரசும் அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்ய வரி விதித்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.
பாதிப்பு
இந்தியாவின் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா விதித்துள்ள வரியால் முறையே 198.6 டாலர் மற்றும் 42..4 மில்லியன் டாலர் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
ஸ்டீல் ஏற்றுமதியும் இறக்குமதியும்
இது குறித்து உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா புகார் அளித்தும் இது வரை எந்த முடிவும் எட்டவில்லை. இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் 22.3 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க ஸ்டீல் பொருட்களை இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications