2 வருடத்திற்கு முன் உலகையே உலுக்கிய பனாமா பேப்பர்ஸ், தற்போது இரண்டாவது முறையாக மோசாக் போன்செகா நிறுவனத்தில் இருந்து ரகசியமாகச் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கைப்பற்றிய ஆவணங்கள் 2வது பகுதியாக வெளியிட்டுள்ளது.
2016ஆம் வெளியிடப்பட்ட 12 லட்ச ஆவணங்களில் சுமார் 12,000 ஆவணங்கள் இந்தியர்கள் தொடர்புடையதாக இருந்தது. இந்த மோசடி ஆவணங்களில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியான புதிய ஆவணங்களில் புதிதாகப் பல இந்தியர்களின் சிக்கியுள்ளதாகப் பனாமா பேப்பர்ஸ் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக
பிவிஆர் சினிமா தலைவர் அஜய் பிஜிலி மற்றும் அவர் குடும்பத்தினர்
ஹைக் மெசஞ்ர் தலைவர் கவின் பார்தி மிட்டல்
ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ப்ரொமடர் ஜாலாஜ் அஷ்வின் தானி
ஷிவ் விக்ரம் கெம்மா
நடிகர் அபிதாப் பச்சன்
ஜெஹான்கீர் சோரப்ஜி
டிஎல்எப் குரூப் கேபி சிங்
அனுரங் கெஜிரிவால்
நவின் மெஹெர்
ஹஜ்ரா இக்பால் மெமம், ஆகியோர் 2வது முறை ஆவண வெளியிட்டில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications