2017-ம் ஆண்டின் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 19 வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவன தலைவரான முகேஷ் அமபானி வால்மார் தலைவர் ராப் வால்டன் மற்றும் ஜிம் வால்டன் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி 15வது இடத்தினைப் பிடித்துள்ளார் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ப்ளும்பெர்க் இண்டெக்ஸ் ராங்க்கிங் சேவையானது உலகின் டாப் 500 கோடீஸ்வரர்கள் பட்டியலில் திஅனமும் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி
முகேஷ் ஆம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ஜூன் 19-ம் தேதி கணக்கின் படி 2.75 லட்சம் கோடி ரூபாய் ஆகும். 14வது இடத்தில் உள்ள அலிபாபா நிறுவனர் ஜாக் மாவின் சொத்து மதிப்பு 3.11 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இரண்டு நாட்கள்
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சந்தை மூலம் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களில் இவரது சொத்து மதிப்பு 9,400 கோடி ரூபாய் அதிகரித்ததாகத் தரவுகள் கூறுகின்றன.
என்னவெல்லாம் வாங்கலாம்?
முகேஷ் அம்பானி வசம் தற்போது உள்ள செல்வத்தின் மூலம் 56.6 கோடி பேரல் கச்சா எண்ணெய் வாங்க முடியும். இல்லை என்றால் 1 கோடி கிராம் தங்கம் வாங்கலாம்.
ஜேப் பிசோஸ்
அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பிசோஸ் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 144.8 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவன தலைவரான பில் கேட்ஸ் சொத்து சொத்து மதிப்பு 92.8 பில்லியன் டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது.
வாரன் பஃப்பெட் & மார்க் ஜூக்கர்பெர்க்
உலகின் மூன்றாவது மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆக வாரன் பஃப்பெட் உள்ள நிலையில் அவரைப் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் நெருங்கியுள்ளார். மாக் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் டாலர். கடந்த ஒரு வருடத்தில் 8.8 பில்லியன் டாலர் செல்வத்தினைச் சேர்த்துள்ளார். கேம்பிரிஜ் அனலிட்டிகா சர்ச்சையில் மிகப் பெரிய அளவில் இவரது பங்குகள் சரிந்தன.
வாரன் பஃப்பெட் தனது வருவாயில் பெரும் பங்கினை சமுகத் தொண்டு நடவடிக்கைகளுக்காகச் செலவழித்து வருவதால் இவரது செல்வ மதிப்பு சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications