சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 4,000 டாலராக இருந்த பிட்காயின் அசுர வளர்ச்சி பெற்று அடுத்த இரண்டு மாதத்தில் 19,000 டாலரினை எட்டியது. ஆனால் 2018-ம் ஆண்டு மீண்டும் 6,000 டாலரினை விடக் குறைவாகச் சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிட்காயின் மதிப்பு 5,787 டாலராகச் சரிந்து மீண்டும் திங்கட்கிழமை காலை 6,131 டாலர் என்ற நிலையினை எட்டியுள்ளது.
சரிவுக்குக் காரணம் என்ன?
பிட்காயினின் இந்தச் சரிவுக்கு வரி, பல நாடுகளில் ஏற்பட்டு வரும் தடை, விதிமுறை கட்டுப்பாடுகள், ஹாக்கிங் மோசடிகள் போன்றவையே என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஃபெடரல் ரிசர்வ் வங்கி
சான்பிரான்சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்கி வரும் காலத்தில் பிட்காயின் மிகப் பெரிய சரிவினை சந்திக்கும் என்று கூறியிருந்தது. வேகமாக விலை உயர்வது மற்றும் உடனடியாகச் சரிவது என்பது ஒன்றும் தற்செயலாக நிகழ்வது அல்லது என்று கூறியிருந்தனர்.
பிட்காயினின் உட்சம்
2009-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட பிட்காயின் கிரிப்டோகரன்ஸி 2017-ம் ஆண்டு இடையில் 4000 டாலர் என்று இருந்ததில் இருந்து சில மாதத்தில் பல மடங்கு உயர்ந்தது. டிசம்பர் மாதம் 17-ம் தேதி 19,511 டாலர் என்ற நிலையினை எட்டியதே உட்சபட்சமாக உள்ளது.
லாபமும், முதலீடும்
பிட்காயின் மதிப்பு என்ன தான் சரிந்து இருந்தாலும் ஒரு வருடத்திற்கு முன்பு அதில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு எல்லாம் அது மிகப் பெரிய லாபத்தினை அளித்துள்ளதால் அதன் மீதான ஆர்வம் குறையாமல் பலர் உள்ளதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பிட்காயின்
கிரிப்டோகரன்சிகளில் பிட்காயினும் ஒன்று, டிஜிட்டல் கரன்சியான இதற்கு மதிப்பு என்ற ஒன்றே இல்லை என்று கூறினாலும், அதிக ரிஸ்க் இருப்பினும் அதிக லாபத்தினையும் அளிப்பதால் முதலீட்டாளர்கள் இதனைப் பெரும் அளவில் விரும்புகிறார்கள்.
ஏகாயின்
அன்மையில் பாப் இசை பாடகரான ஏகான் தங்களது ஆப்ரிக்கா நாட்டின் வளர்ச்சிக்காக ஏகாயின் என்ற கிரிப்டோகரன்சியினை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications