வேலைவாய்ப்பு தேடல் இணையதளமான Naukri.com இந்தியாவின் வேலை வாய்ப்பு சந்தை 2017 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 2018-ன் ஏப்ரல் மாதத்தில் 21 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதே நேரம் ஐடி மையங்களான சென்னை மற்றும் ஹைதராபாத்தின் வேலை வாய்ப்பு வளர்ச்சி பிற நகரங்களுடன் ஒப்பிடும் போது 13 சதவீதம் எனக் குறைந்த அளவிலான வளர்ச்சியினை மட்டுமே பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மும்பை
இந்தியாவின் நிதி நகரமான மும்பை சென்னை மற்றும் ஹைதராபத் உடன் ஒப்பிடும் போது சற்று அதிகம் என 14 சதவீத வேலை வாய்ப்பு வளர்ச்சியினைப் பெற்றுள்ளது.
டெல்லி
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வேலை வாய்ப்பு வளர்ச்சியானது மும்பையினை விட அதிகம் என 15 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளது.
கொல்கத்தா
மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும் போது முதல் இடத்தில் உள்ள கொல்கத்தாவில் சென்ற வருடத்தினை விட அதிகபட்சமாக 38 சதவீத வேலை வாய்ப்பு வளர்ச்சியினைப் பெற்றுள்ளது.
துறை வாரியான அறிக்கை
இந்தியாவில் அதிகபட்சமாக ஆட்டோமொபைல் துறை 31 சதவீத வேலை வாய்ப்பு வளர்ச்சியினையும், டெலிகாம் துறை 25 சதவீதமும், எப்எம்சிஜி துறை 21 சதவீதமும், கட்டுமான துறை 21 சதவீதமும் வளர்ச்சியினைப் பெற்றுள்ளன.
பிபிஓ மற்றும் பார்மா நிறுவனங்கள் 18 சதவீத வளர்ச்சியினைப் பெற்று இருக்கும் நிலையில் ஐடி சேவைகள் துறை 13 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளன.
ஐடி துறை
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்து ஐடி துறை எப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்து வெறும் 2 சதவீத வேலை வாய்ப்பு வளர்ச்சியினை மட்டுமே பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications