தேடுபொறி நிறுவனமான கூகுள் முதன் முறையாக இந்திய சந்தையில் இ-காமர்ஸ் சேவையினை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
கூகுளின் இந்தப் புதிய இ-காமர்ஸ் இணையதளம் 2018-ம் ஆண்டின் தீபாவளி முதல் சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா இ-காமர்ஸ் சந்தை
இந்தியா இ-காமர்ஸ் சந்தையில் தற்போதைய மதிப்பு 38.5 பில்லியன் டாலர் ஆக உள்ள நிலையில் 2002-ம் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் அளவிற்கு வளரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவு யாரும் எதிர்பாராத ஒன்றாக உள்ளது.
பிளிப்கார்ட்-வால்மார்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ள நிலையில் கூகுள் நிறுவனம் அதில் 2 பில்லியன் டாலரினை முதலீடு செய்யவும் திட்டமிட்டு இருந்தது.
சாப்ட்பாங்க்
ஆனால் பிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கிய போது சாப்ட்பாங்க் நிறுவன பங்குகளை வாங்காததால் மிகப் பெரிய அளவிலான சந்தை மூலதனத்தினை வால்மார்ட் இழந்தது.
கூகுள்
எனவே கூகுள் நிறுவனம் வால்மார்ட்டின் பிள்ப்கார்ட்டில் முதலீடு செய்வதினை தவிர்த்துச் சொந்தமாக ஒரு இ-காமர்ஸ் தளத்தினை உருவாக்கும் முடிவினை எடுத்துள்ளது.
முதலீடு
சென்ற வாரம் JD.com என்ற இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சீன இ-காமர்ஸ் இணையதள நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் 55 மில்லியன் டாலரினை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடானது JD.com-க்கு உள்ள சந்தை மற்றும் புதிய சந்தைகளில் இரண்டு நிறுவனமும் இணைந்து வர்த்தகத்தினை விரிவு படுத்தவே என்று கூறப்படுகிறது.
வால்மார்ட்
கூகுள் நிறுவனம் முதலீடு செய்து இருந்தாலும் JD.com நிறுவனத்தில் ஏற்கனவே வால்மார்ட் நிறுவனமும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆய்வு
கூகுள் நிறுவனம் கடந்த ஒரு ஆண்டாக இந்திய இ-காமர்ஸ் சந்தை குறித்து ஆய்வு செய்து வந்ததாகவும், அதன் முடிவுகளைச் சாதகமாக வந்ததினை அடுத்தே கூகுள் நிறுவனம் இ-காமர்ஸ் சேவையினை இந்தியாவில் இருந்து துவங்க முடிவுச் எய்துள்ளதாகவும் கூகிள்-ன் தயாரிப்பு மேலாளர் சீசர் செங்குப்தா தெரிவித்துள்ளார்.
பட்டறைகள்
இ-காமர்ஸ் சேவையினைத் துவங்குவது குறித்துக் கூகுள் நிறுவனம் 2,000 பட்டறைகளில் பங்கேற்று 15,000 விற்பனையாளர்களுடன் கூட்டு சேர முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவின் கிராமப்புற சந்தைவரை தங்களது இலக்கினை வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications