புதிய ஏசி வாங்கும் போது கட்டுப்பாடு.. மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

டெல்லி: மாநிலங்களவை மத்திய அமைச்சரான ஆர்கே சிங் வெள்ளிக்கிழமை ஏசி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இயல்புநிலை வெப்பநிலையை 24 டிகிரியாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் மின்சார அமைச்சகம் இதனை விரைவில் அமலுக்குக் கொண்டு வரும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

லேபிள்

லேபிள்

ஏசி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் விழிப்புணர்வை அளிக்க உடலுக்கு உகந்த வெப்பநிலையை 24 டிகிரி என்று உற்பத்தியாளர்கள் லேபிள்கள் மூலம் குறிப்பிட வேண்டும் என்றும் மின்சார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 ஆலோசனை

ஆலோசனை

ஏசி உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் வெப்பநிலை குறைப்பு குறித்த ஆலோசனையினை அறிக்கையினை மத்திய அரசு அனுப்ப முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

சேமிப்பு

சேமிப்பு

ஏசியின் வெப்பநிலையினை 1 டிகிரி குறைக்கும் போது 6% சதவீதம் வரை மின்சாரம் சேமிக்க முடியும். அனைத்து வாடிக்கையாளர்களும் இதனைக் கடைப்பிடித்தால் ஆண்டுக்கு 20 பில்லியன் யூனிட்ஸ் சேமிக்க முடியும் என்றும் ஆர் கே சிங் தெரிவித்துள்ளார்.

 அதிகரித்து வரும் பயன்பாடு

அதிகரித்து வரும் பயன்பாடு

இந்தியாவில் 1990-ம் ஆண்டு முதல் மின்சாரப் பயன்பாடானது 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகச் சர்வதேச எரிசக்தி முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் தற்போது உள்ள சந்தை நிலவரத்தின் படி ஏசி விற்பனை செய்யப்பட்டு வரும்போது 203-க்குள் 200 ஜிகா வாட்ஸ் வரை ஏசிக்கு மின்சாரம் தேவைப்படும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

 

எப்போது முதல் அமலுக்கு வரும்

எப்போது முதல் அமலுக்கு வரும்

ஏசி-க்களில் உள்ள வெப்ப நிலையினைக் குறைப்பது குறித்து மக்களிடம் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு அடுத்த 4 முதல் 6 மாதத்திற்குள் இந்த 24 டிகிரி கட்டுப்பாடு அமலுக்கு வரும் என்றும் தெரியவந்துள்ளது.

அரசு அலுவலகங்கள்

அரசு அலுவலகங்கள்

மத்திய அரசு விமான நிலையம், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்ஸ் மற்றும் அரசு அலுவலகங்களிலும் ஏசி-க்களில் 24 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையினை வைக்கக் கூடாது என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+