ஆட்டோமொபைல் சந்தை தற்போது பெரிய அளவிலான மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டிபள்யூ மற்றும் ஆடி நிறுவனத்திற்குப் போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்க சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இந்த முதலீட்டு மூலம் பிரிட்டன் நாட்டு நிறுவனமான ஜாகுவார் லேண்டு ரோவர் ஜெர்மனி நிறுவனத்திற்குக் கடுமையான போட்டி அளிக்க உள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஆடம்பர கார் பிரிவும் மிகப்பெரிய சந்தை உருவாக்கும் எனவும் தெரிகிறது.

இந்த முதலீட்டின் வாயிலாக ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் தளத்தை முழுமையாக அமைக்க உள்ளது.
மேலும் 2019-21 வரையிலான காலத்திற்கு ஒவ்வொரு வருடமும் 4.5 பில்லியன் பவுண்டு முதலீட்டைச் செய்துள்ளது. இதன் வாயிலாக வருடத்திற்கு 40,320 கோடி ரூபாய் அளவில் முதலீட்டை பிரிட்டன் முதலீட்டாளர் செய்ய உள்ளது.
இதன் மூலம் அடுத்து வரும் காலத்தில் டாடா குழுமம் ஜாகுவார் லேண்டு ரோவர் உடன் இணைந்து பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற உள்ளது.


Click it and Unblock the Notifications