உலகம் முழுவதும் பொட்ரோல், டீசலை நம்பி இயங்கி வரும் நிலையில், அதற்கு அடிப்படையான கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு அதிகளவில் குறைக்கப்பட்ட நிலையில் எண்ணெய் சந்தையில் தட்டுப்பாடு நிலவி இதன் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பொட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அமைப்பான OPEC மற்றும் அவ்வமைப்பில் இல்லாத ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த வாரம் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
உற்பத்தி அளவு
OPEC அமைப்பில் இருக்கும் நாடுகளும் ரஷ்யாவும் இணைந்து கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகள் ஒரு நாளுக்கு 1.8 மில்லியன் பேரல் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என முடிவு செய்து, அதன்படியே நடந்துகொண்டது.
இதன் காரணமாகக் கச்சா எண்ணெய்யில் சந்தையில் தட்டுப்பாடு உருவாகி, பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்தது.
விலை உயர்வு
தற்போது உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு OPEC நாடுகளால் மட்டும் இல்லை, வெனிசுலா நாட்டில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பிரச்சனையிலும் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் OPEC நாடுகள் மற்றும் இவ்வமைப்பில் இல்லாத ரஷ்யா ஆகியவை இணைந்து தனது உற்பத்தி அளவை ஒரு நாளுக்குக் கூடுதலாக 0.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விலை மாற்றம்
இந்த முடிவின் மூலம் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறையாது, ஆனாலும் கணிசமான தாக்கம் ஏற்படும்.
கச்சா எண்ணெய் விலை
இன்றைய வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.73 சதவீதம் சரிந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் 74.77 டாலராகக் குறைந்துள்ளது. மேலும் OPEC பட்டியல் கச்சா எண்ணெய் விலை 2.12 சதவீதம் வரையில் சரிந்து 70.94 டாலர் வரையில் குறைந்துள்ளது.
இதைதொடர்ந்து WTI கச்சா எண்ணெய் 0.35 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications