பிரிட்ஜ், வாசிங் மெஷின், மைக்ரோவேவ், ஏசி, டிஷ் வாஷர் போன்ற பொருட்களை வர்த்தகச் சந்தையில் நாம் வையிட் கூட்ஸ் என்று அழைப்போம். இந்தப் பொருட்களின் விற்பனை சந்தை தற்போது 35,000 கோடி ரூபாயாக உள்ளதா, இது ஒவ்வொரு வருடம் அதிகரித்து வரும் நிலையில் இத்துறையில் 20 வருடத்திற்கு முன்பு வெளியேறிய டாடா மீண்டும் புதிய பெயர், புதிய பொழிவுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது.
வோல்டாஸ்
வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வோல்டாஸ் நிறுவன தயாரிப்பில் சிறப்பான முறையில் உருவான பிரிட்ஜ், வாசிங் மெஷின், மைக்ரோவேவ், மற்றும் டிஷ் வாஷர் ஆகியவற்றைப் பெக்கோ என்னும் பிராண்ட் பெயரில் அறிமுகப்படுத்த உள்ளது.
நோயல் டாடா
டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் வோல்டாஸ் நிறுவனத்தின் தலைவரான நோயல் டாடா கூறுகையில், இதற்காக வோல்டாஸ் தலைமையில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது மட்டும் அல்லாமல் இந்திய வொயிட் கூட்ஸ் சந்தையில் சுமார் 10 சதவீத சந்தையைப் படிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது எனத் தெரிவித்தார் நோயல்.
1998 வரை
டாடா குழுமம் இந்தியாவில் டாடா இந்தியாவில் பிரிட்ஜ், வாசிங் மெஷின் மற்றும் ஏசி ஆகியவற்றை விற்பனை செய்து வந்தது. அதன் பின்னர் வர்த்தக மாற்றம், நகர்வோர் தேவையை உணர்ந்து ஏசி தயாரிப்பு மற்றும் விற்பனையில் மட்டும் வோல்டாஸ் இயங்கி வந்தது.
ஏசி மற்றும் ப்ரீசர்
இக்காலகட்டத்தில் வோல்டாஸ் ஏசி மட்டும் அல்லாமல் கமர்சியல் ப்ரீசர் ஆகியவற்றில் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்றது. இதனால் பிரிட்ஜ், வாசிங் மெஷின் தயாரிப்பை கைவிட்டது.
கூட்டணி
வோல்டாஸ் பெயரில் இந்நிறுவனம் பிரிட்ஜ், வாசிங் மெஷின்களைத் தயாரிக்கவில்லை என்றாலும் 2003 ஆம் ஆண்டு வரையில் எல்ஜி, சாம்சங் நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் உற்பத்தி செய்து அளித்தது குறிப்பிடத்தக்கது.
டாப் 3
இந்நிலையில் 20 வருடத்திற்குப் பின் மீண்டும் டாடா குழுமம் நோயல் டாடா தலைமையில் வொயிட் கூட்ஸ் சந்தையில் இறங்குகிறது.
வோல்டாஸ் நிறுவனத்தின் இந்த 2வது இன்னிங்ஸில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகவே சுமார் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் களமிறங்கியுள்ளது. இதன் மூலம் அடுத்தச் சில வருடத்தில் இத்துறையில் டாப் 3 இடத்தைப் பிடிக்க வேண்டும் என டாடா குழுமம் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications