ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரிந்த பிறகு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஆணையம் மாதம் 1000 ரூபாய் என வழங்கி வரும் பென்ஷன் தொகை வரம்பை உயர்த்த வாய்ப்புகள் உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன.
வருங்கால வைப்பு நிதி ஆணையம் தற்போது மாதம் 1000 ரூபாய் எனப் பென்ஷன் வழங்கி வரும் நிலையில் அதனை 2,000 ரூபாய் ஆக உயர்த்த வாய்ப்புள்ளது. மத்திய அரசு இது குறித்து இன்று (ஜூன் 26-ம் தேதி) நடைபெற்று வரும் கூட்டத்தில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு பென்ஷன் தொகையினை உயர்த்த முடிவெடுத்தால் ஆண்டுக்கு 3,000 முதல் 4,000 கோடி வரை கூடுதல் செலவாகும் என்றும் இதனால் 40 லட்சம் நபர்கள் பயன் அடைவார்கள் என்றும் தரவுகள் கூறுகின்றன.
வருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்கப்படும் இந்தப் பென்ஷன் தொகை ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து பிஎப்-க்காக வழங்கப்படும் 12 சதவீத பங்கீட்டில் இருந்து 3.67 சதவீத தொகை ஈபிஎஸ் எனப்படும் பென்ஷ்ன் திட்டத்திற்காக அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications