2016-ம் ஆண்டு பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்ட விஜய் மல்லையா..!

இந்திய வங்கி நிறுவனங்களில் கடன் பெற்றுவிட்டு 9,000 கோடி ரூபாயினைச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்ழம் புகுந்துள்ள விஜய் மல்லையா 'தான் கடனை செலுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாகவும், ஆனால் வங்கிகள் தான் என்னைப் பற்றித் தேவையில்லாமல் வெளியில் கூறி பெயரைக் கெடுத்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

பதில் அளிக்காத பிரதமர் மற்றும் நிதி அமைச்சகம்

பதில் அளிக்காத பிரதமர் மற்றும் நிதி அமைச்சகம்

2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி தான் பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியதாகவும், ஆனால் அதற்கு இன்று வரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிற்குத் தப்பி ஓட்டம்

வெளிநாட்டிற்குத் தப்பி ஓட்டம்

விஜய் மல்லையாவிற்கு 62 வயது ஆகியுள்ள நிலையில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு 2016-ம் ஆண்டு வெளிநாட்டிற்குத் தப்பி ஓடியதை அடுத்து இவர் மீது பல மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள்

வங்கிகள்

இவருக்குக் கடன் அளித்த வங்கி நிறுவனங்கள் 9,000 கோடி ரூபாய் வரை திருப்பி அளிக்க வேண்டும் என்று அழுத்தம் தர வெளிநாட்டிற்குத் தப்பி ஓடினார். சென்ற ஆண்டு இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா அன்று மாலைக்குள் பிணை தொகையினைச் செலுத்திவிட்டு ஜாமின் பெற்றார்.

கடிதம்

தற்போது 2016-ம் ஆண்டு இவர் பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தினை இங்குக் கோப்பு வடிவத்தில் பார்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+