விஜய் மல்லையாவின் புதிய நாடகம்.. உண்மை பின்னணி என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிங்பிஷர் நிறுவன பெயரில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு லண்டனுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டு இருந்தாலும், இன்றும் அங்குச் சொகுசு வாழ்க்கையைத் தான் அவர் வாழ்ந்து வருகிறார்.

ஒவ்வொரு மாதமும் விஜய் மல்லையா மீது சுமத்தப்பட்டு வழக்கு விசாரணை அடுத்தகட்டத்திற்குச் செல்லும் சூழ்நிலையில் திடீரென நான் நல்லவன், வல்லவன் போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார் விஜய் மல்லையா. இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன..?

தொடர் வழக்குகள்

தொடர் வழக்குகள்

நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா எங்கு இருக்கிறார் எனத் தெரியாமல் பல வாரங்களுக்கு இந்திய அரசு தேடிவந்த நிலையில், 2016இல் அவர் லண்டனில் தலைமறைவாக உள்ளார் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, மல்லையா மீது பல வழக்குகள் சுமத்தப்பட்டு, லண்டன் நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2016 கடிதம்

2016 கடிதம்

இந்தக் காலகட்டத்தில் விஜய் மல்லையா தான் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதாகவும், அதற்குச் சில உதவிகள் வேண்டும் எனவும் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் கடிதம் எழுதினார்.

தற்போது அந்தக் கடிதத்தைப் பொதுவெளிக்கு அளித்துப் பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜய் மல்லையா.

 

சொத்து விற்பனை செய்ய அனுமதி

சொத்து விற்பனை செய்ய அனுமதி

இந்நிலையில் விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப அளிக்கும் வகையில் நீதிமன்ற கண்காணிப்பில் தனது சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அனுமதியின் வாயிலாக முடங்கிக் கிடக்கும் விஜய் மல்லையா சொத்துகளை விற்பனை செய்து தனது பெயரில் இருக்கும் 13,000 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

12,000 கோடி ரூபாய் சொத்து

12,000 கோடி ரூபாய் சொத்து

அமலாக்கத் துறை விஜய் மல்லையா தலைமையில் இருக்கும் USL மற்றும் UBL நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துக்களைக் கைப்பற்றியது, இதன் மதிப்பு கிட்டத்தட்ட 12,000 கோடி ரூபாய்.

அனுமதி

அனுமதி

கடந்த வாரம் தான் இந்தச் சொத்துக்களை அரசு தலைமையிலேயே விற்பனை செய்து வங்கி கடனையும், கிங்பிஷர் ஊழியர்களுக்கு அளிக்கவேண்டிய சம்பள நிலுவை ஆகியவற்றைத் திருப்பி அளிக்க அனுமதி கிடைத்தது.

நாணயமானவர்

நாணயமானவர்

இந்தச் சமயம் பார்த்து விஜய் மல்லையா 2016இல் தான் மோடிக்கும், அருண் ஜேட்லிக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டு, தான் ஒரு நாணயமானவர் என்ற தோற்றத்தை உருவாக்கி அமாலக்க துறை கைப்பற்றிய சொத்துகளை விற்பனை செய்வதில் இருந்து தடுக்கும் முயற்சியாகவும் இதைப் பார்க்கப்படுகிறது.

டிவீட்

விஜய் மல்லையா நிகழ்த்தும் நாடகத்தை இந்தக் கோணத்திலும் பார்க்க வேண்டும் என உணர்த்தும் டிவீட்.

கடிதம்

தற்போது 2016-ம் ஆண்டு இவர் பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தினை இங்குக் கோப்பு வடிவத்தில் பார்க்கலாம்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்ட விஜய் மல்லையா..!

பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்ட விஜய் மல்லையா..!

2016-ம் ஆண்டுப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்ட விஜய் மல்லையா..!2016-ம் ஆண்டுப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்ட விஜய் மல்லையா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya suddenly offers to settle all bank dues

Vijay Mallya suddenly offers to settle all bank dues - Tamil Goodreturns | விஜய் மல்லையாவின் புதிய நாடகம்.. உண்மை பின்னணி என்ன..? - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X