வீடு வாங்க போகிறீர்களா? எந்த நகரங்களில் எல்லாம் விலை உயர்த்துள்ளது மற்றும் சரிந்துள்ளது என தெரியுமா?
நேஷ்னல் ஹவுசிங் பாங்க்ஸ் நிறுவனத்தின் வீட்டு விலை குறியீடு அறிக்கை ஒன்று செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவின் டாப் 39 நகரங்களில் எங்கு எல்லாம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 2017-2018 நிதி ஆண்டின் 4 ம் காலாண்டில் வீடு விலை உயர்ந்துள்ளது மற்றும் குறைந்துள்ளது என்ற விவரங்களை தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக லக்னோவில் வீடு விலை 9.4 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவின் டாப் 8 நகரங்களில் மார்ச் காலாண்டில் எங்கு எல்லாம் சொத்துக்கள் விலை உயர்ந்துள்ளது?
| நகரங்கள் | விலை மாற்றம் | ஆண்டு மாற்றம் % |
|---|---|---|
| கொல்கத்தா | உயர்வு | 8.5 |
| ஹைதெராபாத் | உயர்வு | 5 |
| மும்பை | உயர்வு | 3.8 |
| தில்லி | உயர்வு | 3.3 |
| பெங்களூரு | உயர்வு | 2.3 |
| அகமதாபாத் | உயர்வு | 2.2 |
| சென்னை | உயர்வு | 0.7 |
| புனே | சரிவு | -1.4 |
இந்தியாவின் டாப் 8 நகரங்களில் மார்ச் காலாண்டில் எங்கு எல்லாம் சொத்துக்கள் விலை குறைந்துள்ளது?
| நகரங்கள் | % சரிவு |
|---|---|
| பாட்னா | 12.2 |
| பரிதாபாத் | 7.1 |
| வதோதரா | 3.5 |
| ராஜ்கோட் | 1.8 |
| போபால் | 1.7 |
| ஹவுரா | 1.7 |
| புனே | 1.4 |
| வாஷி-விரார் | 0.9 |
| மீரட் | 0.8 |
| நாசிக் | 0.8 |
மார்ச் காலாண்டில் இரண்டாம் தர நகரங்களில் எங்கு எல்லாம் சொத்துக்கள் விலை உயர்ந்தது?
| நகரங்கள் | % உயர்வு |
|---|---|
| லக்னோ | 9.4 |
| இந்தூர் | 7.1 |
| சண்டிகர் | 6.4 |
மார்ச் காலாண்டில் இரண்டாம் தர நகரங்களில் எங்கு எல்லாம் சொத்துக்கள் விலை குறைந்தது?
| நகரங்கள் | % சரிவு |
|---|---|
| கொச்சின் | 2.4 |
| திருவனன்ந்தபுறம் | 2.8 |
| நாக்பூர் | 2.4 |
| குர்காம் | 2.8 |
| டேராடூன் | 2.6 |
மார்ச் காலாண்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் விலை எங்கு எல்லாம் உயர்ந்தது?
| விவரங்கள் | ஆண்டு வளர்ச்சி (நகரங்களின் எண்ணிக்கை) | காலாண்டில் வளர்ச்சி (நகரங்களின் எண்ணிக்கை) |
|---|---|---|
| உயர்வு | 39 | 34 |
| சரிவு | 10 | 8 |
| மாற்றம் இல்லை | 1 | 8 |
மார்ச் காலாண்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் விலை எங்கு எல்லாம் குறைந்தது?
| விவரங்கள் | ஆண்டு வளர்ச்சி (நகரங்களின் எண்ணிக்கை) | காலாண்டில் வளர்ச்சி (நகரங்களின் எண்ணிக்கை) |
|---|---|---|
| ஏற்றம் | 32 | 22 |
| இறக்கம் | 10 | 3 |
| மாற்றம் இல்லை | 5 | 22 |


Click it and Unblock the Notifications