இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சேவைக்கு முக்கியக் காரணம் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு வழங்கும் அதிரடி சலுகைகளே காரணம் ஆகும். கோடை விடுமுறை, ரம்ஜான் விடுமுறை என அனைத்தும் முடிந்துள்ள நிலையில் ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா, இண்டிகோ என விமானப் போக்குவரத்தது நிறுவனங்கள் உள்நாட்டுப் பயணங்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் சலுகைகளை அறிவித்துள்ளன.
ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 25 சதவீதமும், வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கு 30 சதவீதமும் அடிப்படை கட்டண சலுகையினை வழங்குகிறது. இந்தச் சலுகை விலையில் 2018 ஜூன் 30 தேதிக்குள் டிக்கெட்களைப் புக் செய்து ஜூலை 11 முதலான விமானப் பயணங்களில் சலுகைகளைப் பெறலாம்.
ஏர்ஏசியா
ஏர் ஏசியா நிறுவனம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனைத்து விமானங்களிலும் ஜூலை 2 முதல் நவம்பர் மாதம் வரை 20 சதவீத விமான டிக்கெட் அடிப்படை கட்டண சலுகையினை அறிவித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ் 2018 ஜூலை 1 முதல் டிக்கெட்களைப் புக் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இண்டிகோ
இண்டிகோ நிறுவனம் சென்னை - கோழிக்கோடு செல்ல 2,100 ரூபாய் என்றும், சென்னை - தூத்துக்குடி செல்ல 2,999 ரூபாய் என்றும் விமானக் கட்டணங்களை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை விலையில் விமான டிக்கெட்களை ஜூலை 1 வரை புக் செய்யலாம்.
இண்டிகோவின் புதிய வழித்தடம்
இண்டிகோ நிறுவனம் 2018 ஜூன் 28 முதல் கொச்சின் - திருச்சி மற்றும் திருச்சி - பெங்களூரு வழித்தடங்களில் விமானச் சேவையினைத் துவங்க உள்ளது.


Click it and Unblock the Notifications