சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம், இந்திய இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் உருவாகியுள்ள அதிகளவிலான டாலர் தேவை ஆகியவற்றின் காரணமாக, இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.10 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ப்யூச்சர் சந்தையைக் குறி வைத்து தனது பணிகளைத் துவங்க உள்ளது. ஆர்பிஐ அப்படி என்ன செய்யப்போகிறது.
ரிசர்வ் வங்கி
பொதுவாக இந்திய சந்தையில் ரூபாய் மதிப்பின் மாற்றங்களைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி ஸ்பாட் சந்தையில் தலையிட்டு அதனைச் சரிக்கட்ட முயற்சி செய்யும். இதன் மூலம் ரூபாய் மதிப்பை உயர்த்தவும், குறைக்கவும் ரிசர்வ் வங்கியால் முடியும்.
ரூபாயின் புழக்கம், வங்கித்துறையில் பண இருப்பு ஆகியவை நாட்டின் பணவீக்கம் மற்றும் பத்திர லாபத்தைக் கட்டுப்படுத்தும் இரு முக்கியக் கருவியாகும். ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையும் இதன் அடிப்படையில் தான் இயங்குகிறது.
பத்திர லாபம்
கடந்த சில மாதங்களாகவே இந்திய பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாப அளவீடுகள் அதிகரித்து வருவதால் கடன் விகிதம் தற்போது 8% உயர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பத்திர முதலீட்டின் லாபத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி ஒப்பன் மார்கெட் ஆப்ரேஷன்ஸ் (OMO) பணிகளைத் துவங்கும்.
OMO பணிகள்
தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி பத்திரங்களைப் பெற்றுச் சந்தையில் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க ரூபாய் பத்திரங்களை விற்பனை செய்தும், டாலர் பத்திரங்களை வாங்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் இந்தத் தலையீடு ப்யூச்சர் சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா
இந்தியா ரூபாய் போலவே சீனாவின் யூவான் மதிப்பும் அமெரிக்கா டாலருக்கு எதிராக அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் சீனாவும் முக்கிய மாற்றங்களைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்தேர்தல்
இந்தியாவில் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இந்நிலையில் வரலாறு காணாத இந்திய ரூபாயின் சரிவு பெரிய அளவிலான பாதிப்பை மோடி அரசுக்கு உருவாக்கியுள்ளது.
இந்திய வர்த்தகச் சந்தை நிலை தொடர்ந்து இதே போல இருந்தால் அடுத்தச் சில வாரங்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.50ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications