எல்ஐசி-யின் திடீர் முடிவு.. சாமானியர்களின் பயத்திற்கு என்ன பதில்..!

அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கியின் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குப் பங்குகளை வாங்கத் திட்டமிட்டு, அதற்கான ஒப்புதலையும் எல்ஐசி நிர்வாகம் அளித்துள்ளது.

எல்ஐசியின் இந்த முடிவால் அரசை நம்பி தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு வருடமும் பல ஆயிரங்களைக் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யதும் சாமானியர்கள் முதல் பெரிய பெரிய முதலீட்டாளர்கள், முதலீடு நிறுவனங்களும் இந்த எதிர்த்தும், முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

டிவிட்டர்

டிவிட்டர்

எல்ஐசி ஏடிஎம் ஆக மாறிவிட்டத்து என் எம்டிஐ கல்லூரியின் நிதியியல் பேராசிரியர் மற்றும் முதலீட்டாளருமான சஞ்சய் பக்ஷி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இவர் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு.

 

 பங்குச்சந்தை மற்றும் அரசு நிறுவனங்கள்

பங்குச்சந்தை மற்றும் அரசு நிறுவனங்கள்

அரசு அறிவிப்புகள், முடிவுகள், நடவடிக்கைகள் மூலம் பங்குச்சந்தை பாதிப்பு அடையும் போது எல்ஜசி நிறுவனத்தின் அதீத முதலீட்டால் பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவுகள் தடுக்கப்படுகிறது.

அதேபோல் பிரச்சனையில் உள்ள அரசு நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காகவும் பல முறை எல்ஜசி முதலீடு செய்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வராக்கடனில் மூழ்கியிருக்கும் ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி அதிகளவில் முதலீடு செய்வது தவறு என முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

 

வங்கி அனுபவம்

வங்கி அனுபவம்

எல்ஐசி ஆரம்பம் முதல் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமாகவே உள்ளது, ஆகையால் ஒரு வங்கி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குப் பங்குகளை வாங்குவதன் மூலம் எல்ஐசி வங்கியின் நேரடி நிர்வாகப் பொறுப்புகளுக்கு வரும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்ஐசி நிறுவனத்திற்கு ஒரு வணிக வங்கியை நிர்வாகம் செய்யும் திறன் உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

 

எல்ஐசி பங்கு இருப்பு

எல்ஐசி பங்கு இருப்பு

ஏற்கனவே ஐடிபிஐ வங்கியின் எல்ஐசி நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்து சுமார் 10.82 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த அளவீடு 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்றால் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் எல்ஐசி ஒப்புதல் பெற வேண்டும்.

43 சதவீத பங்குகள்

43 சதவீத பங்குகள்

தற்போது எல்ஐசி நிறுவனம் எடுத்துள்ள முடிவின் படி ஐடிபிஐ வங்கியில் சுமார் 43 சதவீத பங்குகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஐடிபிஐ வங்கியின் நிர்வாகக் குழுவில் எல்ஐசி பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தும்.

 

 ஐடிபிஐ வங்கியின் நஷ்டம்

ஐடிபிஐ வங்கியின் நஷ்டம்

மார்ச் காலாண்டில் மட்டும் ஐடிபிஐ வங்கி சுமார் 5,662.76 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது, இதுவே கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 3,199.77 கோடி ரூபாயாக இருந்தது.

வராக்கடன்

வராக்கடன்

மேலும் மார்ச் காலாண்டு வரையிலாகக் காலகட்டத்திற்கு ஐடிபிஐ வங்கியின் வராக்கடன் மதிப்பு 55,588 கோடி ரூபாயாக இருந்தது, இது கடந்த நிதியாண்டில் 44,753 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இவ்வங்கியின் மொத்த வருமானம் 44 சதவீதம் சரிந்து 1,633.29 கோடியில் இருந்து வெறும் 915.47 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

 

பயம்

பயம்

இப்படியிருக்கும் சூழ்நிலையில் சாமானியர்களின் முதலீட்டால் மட்டுமே இயங்கும் அரசு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அதிக நஷ்டத்தில் இருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது பெரிய மக்களின் பணத்திற்கும் உறுதி அளிக்கப்பட்ட தொகைக்கும் உத்தரவாதம் குறையும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+