வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் மொபைல் வாயிலாகப் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தல் மற்றும் இதர சேவைகள் வழங்கும் செயலியான பாஸ்போர்ட் சேவா-ஐ அறிமுகப்படுத்தினார்.
பாஸ்போர்ட் சேவை தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் அலுவலர்கள் மற்றும் வெளியறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றிய சுஸ்மா சுவராஜ், பாஸ்போர்ட் பெறும் வழிமுறையை எளிமையாக்கும் பொருட்டு இந்தியாவில் எங்கிருந்தும் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தல் மற்றும் மொபைல் மூலம் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பத்தில் என்ற இரு புதிய திட்டங்களைக் குறிப்பிட்டு பேசினார்.

'பாஸ்போர்ட் புரட்சி' என்று இதை அழைத்த சுஸ்மா, பாஸ்போர்டும் மற்றும் ஹஜ் யாத்திரைக்கான விசாவும் இந்திய குடிமக்களோடு கலந்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஹஜ் யாத்திரை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இருந்தாலும், பாஸ்போர்ட் வெளியுறவுத்துறையிடம் தான் உள்ளது.
இதுவரை கவுகாத்தியில் அதன் அருகிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு பாஸ்போர்ட் மையம் செயல்பட்டு வந்த நிலையில், நாட்டின் வடகிழக்குப் பகுதிகளுக்கு என்று தனியாகப் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முதல் இரண்டு கட்டங்களில் நாங்கள் அறிவித்த 251 பாஸ்போர்ட் பதிவு மையங்களில், 212மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 38 கூடுதல் மையங்கள் இரண்டு மையங்கள் செயல்படுகின்றன எனவும் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். தற்போது 260 பாஸ்போர்ட் மையங்கள் செயல்பட்டுவரும் நிலையில், எதிர்காலத்தில் அனைத்து மக்களவை தொகுதிக்கும் ஒரு பாஸ்போர்ட் மையம் என்ற வீதத்தில் விரிவாக்கப்படும் என அறிவித்தார்.
முன்னதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இடையே நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், பாஸ்போர்ட் வழங்குதல் மற்றும் பாஸ்போர்ட் வழங்கும் விண்ணப்பத்தை மக்களுக்கு எளிதாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்தனர்.
தற்போது வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள், புதிய பாஸ்போர்ட் மையங்களை நிறுவ சாத்தியமான பகுதிகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications