வியாழக்கிழமை நாணய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத விதிமாக 68.89 ரூபாயாகக் குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பு 69 அளவில் குறைந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன பிரச்சனை..?
இந்திய இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளில் அதிகளவிலான டாலர் தேவை இருக்கும் காணத்தாலும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் அதிகளவிலான பணத்தை அமெரிக்க டாலருக்கு மாறவும் இந்தச் சந்தை தள்ளப்பட்டது, இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் அளவில் குறைந்துள்ளது.
மிகப்பெரிய சரிவு
ஏற்கனவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 மாத சரிவு அதாவது 68.61 ரூபாய் என்ற நிலையை அடைந்திருந்த போது இன்றைய வர்த்தகத்தைல் 37 பைசா கூடுதலாகக் குறைந்து 69.09 ரூபாய் என்ற வரலாறு காணாத சரிவைச் சந்தித்து முதலீட்டாளர்கள் மத்தியிலும், வர்த்தகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
கச்சா எண்ணெய்
தற்போது சர்வதேச சந்தையில் அமெரிக்கா உட்பட நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், எரிபொருள் தேவைக்கு வெளிநாட்டுக் கச்சா எண்ணெயை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் வர்த்தகப் பற்றாக்குறை பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
பணவீக்கம்
வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை உருவாகும் போது தானாகவே விலை வாசி உயரும். இதனால் இந்தியாவில் அடுத்து வரும் காலாண்டில் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் கணிப்புகள் கூறுகிறது.
70 ரூபாய்
மேலும் கச்சா எண்ணெய் சந்தையில் இதே போன்ற உற்பத்தி நிலை உருவாகினால் கண்டிப்பாக அடுத்தச் சில வாரங்களிலேயே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.00 -70.50 ரூபாய் அளவை அடைந்துவிடும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications