நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் 2வது இடத்தில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி தற்போது பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது, இதில் குறிப்பாகச் சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு அளித்த கடன் முறைகேடு, சில வாடிக்கையாளர்களிடம் மட்டும் தவறாக நடந்துகொள்ளுவதாகச் சந்தா கோச்சார் மீதான குற்றச்சாட்டு, புதிய சிஇஓவை தேடும் பணியில் ஐசிஐசிஐ நிர்வாகம், அனைத்தையும் தாண்டி தொடர்ந்து உயர்ந்து வரும் வராக்கடன் பிரச்சனை ஆகிவை இவ்வங்கியை ஆட்டிவைக்கிறது.
அனைத்திற்கும் உச்சமாக ஐசிஐசிஐ வங்கி கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 19,000 கோடி ரூபாயைச் சந்தை மதிப்பீட்டில் இழந்துள்ளது.
பங்குச்சந்தை
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 2.8 சதவீதம் சரிந்து 3 மாத சரிவை பதிவு செய்தது, புதன்கிழமை வர்த்தகத்திலும் 2.8 சதவீதம் சரிந்த ஐசிஐசிஐ கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 11 சதவீதம் சரிந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
4 நாட்கள்
இந்த வாரத்தின் 4 நாள் வர்த்தகத்தில் மட்டும் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சுமார் 11 சதவீதம் வரை சரிந்ததன் மூலம் இவ்வங்கியின் சந்தை மதிப்பீட்டு 19,066.46 கோடி ரூபாய் வரையில் சரிந்தது.
ஐசிஐசிஐ வங்கியின் தாக்கம் தனியார் வங்கித் துறையில் கணிசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செபி
மேலும் சந்தா கோச்சார் தலைமையில் ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்திற்கு அளித்த கடனில் அவர் செய்த முறைகேடுகள் குறித்த கார்ப்பரேட் கவர்னஸ் அறிக்கையைச் செபி, ஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்திடம் கேட்டுள்ளது.
புதிய சிஇஓ
இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடும் பணிகள் வேகமாக நடந்தி வருகிறது.
ஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் புதிதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரைக் சேர்க்க உள்ளது இவ்வங்கி நிர்வாகம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications