சுவிஸ் வங்கி கணக்குகளில் இந்தியர்களின் பணம் 2017-ம் ஆண்டு 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிரான்க் என இந்திய மதிப்பில் 7,000 கோடி ரூபாய் ஆக உள்ளது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகள் சரிந்து வந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் வங்கியில் உள்ள எல்லா நாடுகளின் வாடிக்கையாளர்களின் கணக்கினை வைத்துப் பார்க்கும் போது 3 சதவீத வளர்ச்சி என 2017-ம் ஆண்டு 100 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட்டினை பெற்றுள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கியின் ஆண்டு அறிக்கையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
கருப்புப் பணம்
இந்தியாவில் கருப்புப் பணத்திற்கு எதிராகப் பலதரப்பட்ட நடவைக்க எடுத்து வந்த போது கடந்த மூன்று ஆண்டுகளாகச் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்து வந்த இந்தியர்களின் பணம் பல மடங்கு சரிந்த நிலையில் தற்போது அதிகரித்து இருப்பது ஆச்சர்யத்தினை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
2016-ம் ஆண்டுச் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் டெபாசிட் செய்வது 45 சதவீதம் குறைந்துள்ளது எனப் பிரதமர் மோடி 2017-ம் ஆண்டுப் பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனால் 2017-ம் ஆண்டுக் கூடுதலாக 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
2006
2006-ம் ஆண்டுச் சுவிஸ் வங்கியில் அதிகபட்சமாக 23,000 கோடி ரூபாய் இந்தியர்களின் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருநத்து. தற்போது 2017-ம் ஆண்டு 6,891 கோடியாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் உள்ளது.
சுவிஸ் வங்கி
இந்திய அரசு கருப்புப் பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதற்காகச் சந்தேகமாக உள்ள சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்திய அரசுடன் பகிரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் சுவிஸ் அரசும் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
என்ஆர்ஐ
சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள தரவில் என்ஆர்ஐ-கள் டெபாசிட் செய்துள்ள பணம் இந்தியர்களின் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதிலும் பல நாடுகளில் இந்தியர்கள் குடியேறியுள்ளது மட்டும் இல்லாமல் அங்கு வேலை செய்பவர்களுக்கும் சுவிஸ் வங்கியில் கணக்குகள் உள்ளன.
பிற நாடுகள்
கருப்புப் பணம் எதிராக இந்தியாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளை விட அதிக டெபாசிட்களை இந்தியாவில் இருந்து பெறுவதாகவும் சுவிஸ் வங்கி முன்பு தெரிவித்து இருந்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் இந்தியர்கள் வைத்துள்ள கருப்புப் பணத்தினை விசாரிக்கச் சிறப்புக் குழு செயல்பட்டு வருகிறது. இதில் சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணமும் சேர்த்து அடங்கும்.
2015-2017
2015-ம் ஆண்டுச் சுவிஸ் வங்கியில் 8,000 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியர்களின் பணம் இருந்து வந்த நிலையில் அது 2016-ம் ஆண்டு 4,000 கோடி வரை சரிந்து மீண்டும் 2017-ம் ஆண்டு 7,000 கோடியாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications