மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் 43 சதவீத பங்குகளைக் கைப்பற்ற நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி சுமார் 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய எல்ஐசி நிர்வாகம் இறுதி முடிவு எடுத்துள்ளது.
43 சதவீத பங்குகள்
இந்நிலையில் முதலீடு செய்யப்பட்ட பின்பு ஐடிபிஐ வங்கியின் பங்குகள் அரசு அமைப்பான எல்ஐசிக்கு மாற்றத் தேவையான அனைத்துப் பணிகளையும் தற்போது இவ்வங்கி செய்யத் துவங்கியுள்ளது. இந்தப் பங்கு பரிமாற்றத்திற்குப் பின்பு ஐடிபிஐ வங்கியின் பங்கு இருப்பு 51 சதவீதமாகக் குறைந்து விடும்.
இறுதி ஒப்புதல்
இதோடு ஐஆர்டிஏ, இந்தப் பங்கு கொள்முதலுக்கு இன்று மாலைக்குள் ஒப்புதல் அளிக்கவும், எல்ஐசி நிறுவனத்தின் 15 சதவீத முதலீட்டு அளவை தளர்க்கவும் செய்யும் எனத் தெரிகிறது
பங்கு அளவீடுகள்
மத்திய அரசு தற்போது ஐடிபிஐ வங்கியில் சுமார் 80.96 சதவீத பங்குகளை வைத்துள்ளது, ஏற்கனவே எல்ஐசி 10.82 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்நிலையில் எல்ஐசி தற்போது ஐடிபிஐ வங்கியின் ரியல் எஸ்டேட் மற்றும் பிற வர்த்தகத்தையும் சேர்த்து எல்ஐசி வாங்க உள்ளது.
மொத்த மதிப்பீடு
இன்றைய நிலையில் ஐடிபிஐ வங்கியின் மொத்த மதிப்பு 24,000 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications