மத்திய அரசு 2030-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 30 சதவீத எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று இலக்கினை வைத்துள்ளது. இதனை ஆதரிக்கும் வகையில் தெலுங்கானா அரசு 2019 ஜூன் 29 வெள்ளிக்கிழமை எலக்ட்ரிக் வாகன கொள்கை முடிவினை அறிமுகம் செய்துள்ளது.
தெலுங்கானா அரசின் இந்த முடிவினால் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களுக்குப் பல விதமாகச் சலுகை அளிக்கும் விதமாக இந்தக் கொள்கைகள் அமைந்துள்ளது.
எலக்ட்ரிக் வாகன கொளை அறிவிப்பு நிகழ்வு
தெலுங்கானா அரசின் இந்த எலக்ட்ரிக் வாகன கொள்கைகளை அறிவிக்கும் நிகழ்வில் தெலுங்கானா தொழில்துறை மற்றும் ஐடி துறை அமைச்சரான கே டி ராமா ராவ், மகேந்திரா & மகேந்திரா குழுமத்தின் இயக்குநரான பவன் கோயங்கா மற்றும் பிற தொழில் நிறுவன தலைவர்கள் எல்லாம் பங்கேற்கின்றனர்.
வரைவு அறிக்கை
தெலுங்கானாவின் ஐடி மற்றும் தொழில் துறை அமைச்சக செயலாளரான ஜெயேஷ் ரஞ்சன் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதமே எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்த வரைவு கொள்கையினை வெளியிட்டார். அதில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள், சாதாரண வாகனங்களில் இருந்து எலக்ட்ரிக் வாகனத்திற்கு மாற விரும்புபவர்களுக்கான கொள்கைகள் எல்லாம் வகுக்கப்பட்டு இருந்தது.
பொதுப் போக்குவரத்து
தெலுங்கான அரசின் இந்தக் கொள்கைகளில் பொதுத் துறை போக்குவரத்துகளான பேருந்துகள், டாக்ஸி மற்றும் ஆட்டோக்கைகளை எலக்ட்ரிக்காக மாற்றுவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்கள்
முன்னதாக 64 ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலையங்களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கான பணிகளையும் செய்யத் தெலுங்கானா அரசு முடிவு எடுத்துள்ளது.
கர்நாடகா
கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கொள்கையினை எடுத்துள்ள இரண்டாவது இந்திய மாநிலமாகத் தெலுங்கானா உள்ளது.
கர்நாடக அரசு 2017-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதமே எலக்ட்ரிக் வாகனம் மற்றும் ஆற்றல் சேமிப்புக் கொள்கை 2017-ஐ அறிமுகம் செய்து. விரைவில் மகாராஷ்டிராவும் எலக்ட்ரிக் வாகன கொள்கையினை வெளியிட முடிவு செய்துள்ளது.
தமிழ் நாடு
எல்லாத் தொழில் துறை கொள்கைகளுக்கும் ஒரு நேரத்தில் தமிழ் நாடு முன்மாதிரியாக இருந்து வந்த நிலையில் அது கடந்த சில ஆண்டுகளாகத் தேய்ந்து வருகிறது என்றும் இதனால் தமிழ் நாட்டு இளைஞர்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும் நிலை ஏற்பட்டு வருவதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications