உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருப்பது நாம் எல்லோருக்கும் தெரியும், இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களும், வர்த்தகமும் தான் நாட்டின் பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டும் செல்லுகிறது.
இப்படி இந்தியாவில் இகுக்கும் லட்சோப லட்சம் நிறுவனங்கள் மத்தியில் ஊழியர்கள் வேலை செய்யச் சிறப்பான நிறுவனம் எது?. இந்த முக்கியமான கேள்விக்கு 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலை செய்யச் சிறந்த நிறுவனத்தைக் கண்டுபிடிக்கும் பொருட்டுப் பிசினஸ் டூடே முக்கியமான ஆய்வில் டாப் 10 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
10வது இடம்
2018ஆம் நிதியாண்டில் பல வர்த்தகப் பாதிப்புகளைச் சந்தித்தாலும், ஊழியர்களுக்கு ஏதுவான பணி சூழலை அமைத்துக்கொடுப்பதில் பார்தி ஏர்டெல் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இதன் காரணமாகவே இப்பட்டியலில் ஏர்டெல் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
9வது இடம்
இந்திய பார்மா துறையில் முன்னோடியாக இருக்கும் லுபின் நிறுவனம் கடந்த வருடம் 25வது இடத்தில் இருந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஆய்வில் 9வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
8வது இடம்
2017 ஆய்வில் 6வது இடத்தில் இருந்த ஐபிஎம் இந்தியா 2018இல் 8வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎம் நிறுவனம் உலக நாடுகள் முழுவதும் வர்த்தகம் செய்தாலும், இந்திய வர்த்தகத்தில் மட்டுமே லாபகரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
7வது இடம்
ஊழியர்களுக்குச் சிறப்பான வொர்க் லைப் பேலென்ஸ் அளிக்கும் காரணத்தாலும், அதிகளவிலான சுதந்திரம் அளிக்கும் காரணத்தாலும் டாடா ஸ்டீல் இப்பட்டியலில் 7வது இடத்தைப் பெற்றுள்ளது.
6வது இடம்
ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தை நாட்டின் பெரிய எப்எம்ஜிசி நிறுவனம் கொண்டுள்ளதால், இந்நிறுவன ஊழியர்கள் சிறப்பான பணி சூழ்நிலையை அனுபவிக்கின்றனர். இதுமட்டும் அல்லாமல் இந்த விஷயங்களால் தனது போட்டியாளர்களை விடவும் ஒருபடிக்கு மேல் ஹிந்துஸ்தான் யூனிலீவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
5வது இடம்
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் இப்பட்டியலில் 5வது இடித்தை பிடித்துள்ளது.
4வது இடம்
கடந்த வருடம் 5 வது இடத்தில் இருந்த ஐசிஐசிஐ வங்கி 2018இல் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் பிசினஸ் டுடே செய்த வரும் இந்த ஆய்வில் கடந்த 5 வருடத்தில் முதல் முறையாக டாப் 5 இடத்திற்கு ஐசிஐசிஐ வங்கி முன்னேறியுள்ளது.
3வது இடம்
2வது முறையாக இந்த ஆய்வில் அமேசான் நிறுவனம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தில் ஊழியர்களுக்கு அதிகளவிலான சுதந்திரம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு உதவி செய்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் எந்த ஒரு ஊழியரும் எந்த ஒரு துறையில் வேண்டுமானாலும் தனது திறமையை நிருபனம் செய்து பணியை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.
அக்சன்சர்
ஐயர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் அக்சென்சர் நிறுவனம் புதிய கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்டு தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்நிறுவனம் தற்போது பாலினம், இயலாமை, நிறம், சாதி, பாலியல் நோக்குநிலை ஆகியவற்றைக் களையும் வண்ணம் உலக நாடுகளுக்கு ஏற்ற வகையில் கொள்கையை வகுத்து ஊழியர்களுக்குச் சிறப்பான சூழ்நிலையை அமைத்துத் தருகிறது.
முதல் இடம்
பிசினஸ் டூடே செய்த இந்த முக்கியமான ஆய்வில் கூகிள் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது, இந்நிறுவனத்தில் ஊழியர்களுக்கு அதிகளவிலான சுதந்திரம் அளிக்கப்படுவதால் இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications