ஜியோ 4ஜி சேவைப் பயன்பாட்டிற்கு வந்தது முதல் டெலிகாம் நிறுவனங்கள் இடையில் மிகப் பெரிய போட்டி நிலவி வந்த நிலையில் பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்கள் மூலம் விலை போரினை தொடுத்து வந்தன. இதில் இது வரை அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் பெரும் அளவில் பயன்பட்டு வந்தனர்.
ஆனால் இப்போது ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தங்களது இரண்டு ரீசார்ஜ் பேக்குகளின் இணையதளத் தரவுகளைக் குறைத்துள்ளது.
இணையதளத் தரவு குறைக்கப்பட்ட ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் 149 மற்றும் 399 ரூபாய் பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களின் குரல் அழைப்பு விதிகளில் எந்த மாற்றமும் செய்யாமல் இணையதளத் தரவுகளின் அளவினை மட்டும் குறைத்துள்ளது.
என்ன மாற்றம்
ஏர்டெல் நிறுவனம் 149 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்குத் தினமும் 2 ஜிபி தரவு அளித்து வந்த நிலையில் 1 ஜிபி ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதே நேரம் 399 ரூபாய்க்குச் சீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்குத் தினமும் 2.4 ஜிபி தரவு என்பதை 1.4 ஜிபி தரவாகக் குறைத்துள்ளது மட்டும் இல்லாமல் 70 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு இல்லை
ஏற்கனவே இந்தத் திட்டங்களை ரீசார்ஜ் செய்துள்ள பயனர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றாலும் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது தரவுகள் குறையும் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஜியோ
ஏர்டெல் எடுத்துள்ள இந்த முடிவானது அதன் போட்டி நிறுவனமான ஜியோவிற்கு மிகப் பெரிய சாதமான ஒன்றாக அமைந்துள்ளது. தற்போது ஜியோ நெட்வொர்க்கில் 149 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்குத் தினமும் 3 ஜிபி தரவும், 399 ரீசார்ஜ் செய்தால் தினம் 3 ஜிபி என 84 நட்களுக்கு அளித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் ஜியோ மனி செயலி மூலம் 100 ரூபாய் கேஷ் பேக் சலுகைகளையும் ஜியோ வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications